“ஆடியில் அதிர்ஷ்டம்” சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனை!

“ஆடியில் அதிர்ஷ்டம்” சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனை!

கோ-ஆப்டெக்ஸ், என அனைவராலும் அழைக்கப்படும் தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம், 1935-ஆம் ஆண்டில் துவக்கப்பட்டு தொடர்ந்து 82 ஆண்டுகளாக, தமிழ்நாட்டிலுள்ள கைத்தறி நெசவாளர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் சிறப்பான முறையில் சேவை புரிந்து வருகிறது.

இந்தியாவிலுள்ள கைத்தறி நிறுவனங்களிலேயே முதன்மை நிறுவனமாக கோ-ஆப்டெக்ஸ் திகழ்வதற்கு நெசவாளர்களின் ஒத்துழைப்பும், வாடிக்கையாளர்களின் பேராதரவும்தான் முக்கிய காரணங்களாக இருந்துவருகிறது.

வாடிக்கையாளர்கள் அதிக பயனுறும் வகையில், நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் இரகங்களை அதிகம் விற்பனை செய்வதன்மூலம், அவர்களுக்கு கோ-ஆப் டெக்ஸ் தொடர்ந்து வேலை வாய்ப்பினை வழங்கிவருகிறது. மதுரை மக்கள் பருத்தி ஆடைகளை அதிக தள்ளுபடியுடன் வாங்கி அணிந்து மகிழ்ச்சியுடன் திகழ மதுரை பைபாஸ் ரோட்டில் அமைந்துள்ள K.M.மஹாலில் ஆடியில் அதிர்ஷ்டம் சிறப்பு கண்காட்சி மற்றும் இரண்டு வாங்கினால் 1 இலவசம் சிறப்பு தள்ளுபடி விற்பனை 02.08. 2017 முதல் 13.08.2017 வரை நடைபெற உள்ளது. 

இச்சிறப்புக் கண்காட்சியில் மதுரையிலேயே காஞ்சிபுரம் பட்டு புடவைகளும், கோயம்புத்தூர் காட்டன் சேலை ரகங்களும், புதிய அறிமுக இரகங்களான ஜெயகார்த்திகா சேலைகள், குர்தீஸ்களும் இடம் பெறுகிறது. மேலும் குறிப்பிட்ட இரகங்களுக்கு 60% முதல் 70% வரை தள்ளுபடியும் வழங்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் இச்சிறப்பு தள்ளுபடி விற்பனையில் தங்களது குடும்பத்திற்கு தேவையான கைத்தறி இரகங்களை தள்ளுபடி விலையில் பெற்று பயனடைய வேண்டிக் கொள்கிறோம்.

Tags: News, Madurai News, Lifestyle

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top