தமிழகத்தில் இன்றைக்கும் ஓடாத பேருந்துகள்.. தமிழக அரசின் மீது கடுப்பில் பொதுமக்கள்!
Posted on 29/03/2022

பெட்ரோல் டீசல் விலை உயர்வு, தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை கைவிடுதல் ,பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பது, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று, இன்றும் தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் 11 தொழிற்சங்கங்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளன. ஸ்டிரைக் செய்தால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்த நிலையில் தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 32 சதவீதம் பேர் பேருந்துகள் தமிழகத்தில் இயங்காததால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். குறிப்பாக சென்னையில் 90 சதவீத பேருந்துகள் இயக்கப்படவில்லை.
இதனால் பள்ளி , கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகள் , பணிக்குச் செல்வோர் ஆட்டோக்களில் சென்றனர். மெட்ரோ ரயில்கள் மற்றும் புறநகர் ரயில்களில் ரயில்களை நோக்கி பொதுமக்கள் படையெடுப்பினால் அங்கு கூட்டம் அலைமோதியது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் அநேகமான இடங்களில் பேருந்துகள் இன்று இயக்கப்பட்டு வருகிறது. புறநகர் பேருந்துகள் மட்டுமின்றி வெளியூர் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
பொதுமக்களின் நலன் கருதி இன்று 60 சதவீத பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு நேற்று அறிவித்தது. அதன்படி இன்று பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், பணிக்கு செல்வோரின் அத்தியாவசிய தேவை கருதி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி, சென்னையில் 3,500 பேருந்துகளில் இன்று அதிகாலை 2100 பேருந்துகள் இயக்கப்பட்டது.
அதேபோல் தமிழ்நாட்டில் மொத்தமாக 9201 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் பணியாளர்கள் எல்லோரும் பணிக்கு திரும்பிவிட்டதாகவும் தமிழ்நாடு போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. சென்னையை தவிர்த்து கோவை, தூத்துக்குடி, மதுரை திருச்சியில், அரசு பேருந்துகள் நேற்றை விட குறைவாகவே இயக்கப்படுகிறது. தனியார் பேருந்துகள் அதிக அளவில் இயக்கப்பட்டது.
இதனால் பெரும்பாலான தனியார் கல்லூரிகளில் நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் வேறு தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களை பெருந்தவரை பேருந்து முடக்கம் காரணமாக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இன்று இந்த நிலைமை சென்னையை தவிர்த்து தமிழகத்தின் பிற பெரும்பாலான இடங்களில் சீராகுமா ? என்ற கேள்வி எழுந்து உள்ளது.
Tags: News