மூன்றே மாதத்தில் அரசுக்கு ரூ.4,988 கோடி வருவாய்!

மூன்றே மாதத்தில் அரசுக்கு ரூ.4,988 கோடி வருவாய்!

தமிழக பத்திர பதிவுத்துறையில், 100 நாளில் 4,988 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழக அரசு நிதி பற்றாக்குறை காரணமாக பல்வேறு புதிய திட்டங்களை அறிவிப்பதிலும் செயல்படுத்துவதிலும் காலதாமதம் ஆகியுள்ளது. இதன் காரணமாக ஆவின், டாஸ்மாக் பொருட்களின் விலையை உயர்த்தி இருந்தது.  மேலும் பத்திரப்பதிவு துறை 138 ஆண்டுகளாக பொதுமக்களுக்கு சேவை செய்வதுடன் அரசு நிர்வாகத்திற்கு தேவையான நிதியை திரட்டி தருவதில் மூன்றாவது இடத்தை வகிக்கிறது. மாநில சொந்த வரி வருவாயில் பெரும்பங்கை வகிப்பது பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித் துறைகளாகும். இதில் பதிவுத் துறையில், கணினிமயமாக்கம் அதிகரித்ததன் காரணமாக, பத்திர பதிவு எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. 
 
இந்தநிலையில் தமிழக பத்திரப்பதிவு துறை அமைச்சராக உள்ள மூர்த்தி, தனது  துறையில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் காரணமாக, இதுவரை வரலாற்றில் இல்லாத அளவுக்கு பத்திரப்பதிவு துறை அதிக வருவாய் ஈட்டி உள்ளது. வருவாய்த்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், பதிவுத்துறையில் கடந்த 1.4.2022 முதல் 12.7.2022 வரையிலான வருவாய் ரூ.4988.18 ஆகும். இது கடந்த வருடத்தில் இந்த காலகட்டத்தில் வசூலான ரூ. 2577.43 கோடியை விட ரூ. 2410.75 கோடி அதிகமாகும் என தெரிவித்துள்ளது தமிழக பதிவுத்துறையில், 100 நாளில் 4,988 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top