திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலுக்கான 1590 மின்னணு இயந்திரங்கள் தயார்

திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலுக்கான 1590 மின்னணு இயந்திரங்கள் தயார்

“திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் பயன்படுத்த வேண்டிய மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை தயாராக வைத்திருக்க வேண்டும்,'' என, தேர்தல் அலுவலர்களுக்கு டி.ஆர்.ஓ., வேலுச்சாமி உத்தரவிட்டார்.

இத்தேர்தலுக்காக 291 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளன. 1590 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. தற்போது இவை மாநகராட்சி பில்லர் ஹாலில் உள்ளன.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் மாவட்டம் முழுவதும் கட்சி கொடிகள், தோரணங்கள், அரசியல் விளம்பரங்களை மறைக்கும் பணியில் அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பறக்கும் படையினர், நிலை கண்காணிப்பு குழுவினர் 24 மணி நேர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மாவட்டத்தில் நடக்கும் தனியார் மற்றும் கோயில் நிகழ்ச்சிகளுக்கு போலீஸ் ஒப்புதலுடன் தேர்தல் அலுவலரின் அனுமதியும் பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கோரி ஏராளமானோர் தேர்தல் அலுவலர் அலுவலகத்தில் மனு கொடுத்து வருகின்றனர்.

இதற்கிடையில் மதுரையில் இடைத்தேர்தல் ஆய்வுக் கூட்டம் டி.ஆர்.ஓ., வேலுச்சாமி தலைமையில் நேற்று நடந்தது. தொகுதி தேர்தல் அலுவலர் ஜீவா, உதவி அலுவலர்கள் முருகையன், சரவணபெருமாள், மேற்கு தாசில்தார் சிவபாலன், தேர்தல் பிரிவு தாசில்தார் உதயசங்கர் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.

இடைத்தேர்தல் என்பதால் அனைவரது கவனமும் தொகுதியில் தான் இருக்கும். சிறு தவறுக்குக்கூட இடம் கொடுக்காத வகையில் தேர்தல் பணியில் ஈடுபடுவோர் விழிப்புடன் செயல்பட வேண்டும். அரசு மற்றும் தனியார் சுவர்களில் வரையப்பட்டுள்ள அரசியல் கட்சி சின்னங்கள், கொடிகளை மறைக்க வேண்டும்.

பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழுவினர் எட்டு மணி நேர சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பணியில் ஈடுபடுவதை கண்காணிக்க வேண்டும். ஓட்டுச்சாவடிகளை பார்வையிட்டு அடிப்படை வசதிகளை உறுதி செய்ய வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளையும் செய்ய வேண்டும். தேர்தலில் பயன்படுத்தப்படவுள்ள மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை சரி பார்த்து தயாராக வைத்திருக்க வேண்டும் என டி.ஆர்.ஓ., உத்தரவிட்டார்.

Tags: News, Madurai News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top