சட்ட உலகிலும் பெண்களின் பெருமை நிலைநிறுத்தப்பட வேண்டும்

சட்ட உலகிலும் பெண்களின் பெருமை நிலைநிறுத்தப்பட வேண்டும்

மதுரை பெண்கள் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பாக, மதுரை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற விழாவில், மேன்மை தங்கிய நீதியரசர் திரு.T.S. சிவஞானம் அவர்கள், பெண்களின் பெருமை மற்றும் பாதுகாப்பை முன்னிலைப்படுத்தி வழங்கப்பட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்களை விளக்கி ஆற்றிய சிறப்புரையில் முக்கிய அம்சங்கள்...

மதுரை பெண்கள் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பாக மதுரை உயர்நீதிமன்றத்தில், சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு கடந்த மார்ச் 8-ம் தேதி நடைபெற்ற விழாவில் சென்னை உயர்நீதி மன்ற நீதியரசர் மேன்மை தங்கிய T.S.சிவஞானம் அவர்கள் ஆற்றிய ஆங்கில உரையின் சில பகுதிகளின் தமிழாக்கத்தை வாசகர்களின் நன்மையை கருத்தில் கொண்டு கீழே கொடுத்திருக்கின்றோம்:

“இந்த நல்ல நாளில் மதுரை பெண்கள் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பாக, பேசுவதற்கு எனக்கு ஒரு நல்ல வாய்ப்பினை தந்தமைக்காக மகிழ்ச்சியடைகின்றேன். “அகிம்சையே சட்டமானால் அகிலமெல்லாம் பெண்கள் கையில்” என்று தேசப்பிதா மகாத்மா காந்தி அவர்கள் கூறியிருக்கின்றார்கள். இதன் எளிமையான அர்த்தம் என்னவென்றால் அமைதியான சூழ்நிலைகளில் பெண்கள் மகிழ்ச்சியோடு வெற்றியை நோக்கி முன்னெடுத்துச் செல்வார்கள் என்பதுதான். சர்வதேச பெண்கள் தினமாகிய இன்றைய தினத்தில் பெண்களின் வல்லமையையும் அவர்கள் அடைந்துள்ள வெற்றியையும் நினைவில் வைத்து கொண்டாடுகின்றோம்.

இந்தியா பல்வேறு கலாச்சார மற்றும் பாரம்பரிய நடைமுறைகளை பின்பற்றி வேற்றுமையில் ஒற்றுமையை காணும் நாடாகும். இங்கு இப்போது பெண்களின் முக்கியத்துவமும் பெருமையும் அறியப்பட்டு வருவது மகிழ்ச்சிக்குரிய விஷயமாகும்.

ஒரு நாள் கூகுள் என்னும் இணையதளத்தை பார்வையிட்டுக் கொண்டிருந்த போது, பெண்களுக்கான வேலை வாய்ப்பு சம்பந்தமாக சில விபரங்களை தெரிந்து கொள்ள ஏதுவானது. இந்த விபரங்களின்படி இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் 480 மில்லியன் வேலைகள் உருவாக்கப்படுகின்றன. அவற்றில் சுமார் 60 சதவிகிதத்திற்கு நல்ல உயர்பதவிகளில் பெண்களே பணியமர்த்தப்படுகின்றார்கள். இதனில் 86 சதவிதத்திற்கு மேற்பட்ட வெற்றி விகிதங்கள் பெண்களே பெண்களுக்கு அளித்துக் கொள்ளும் பெருமை என்றே சொல்ல வேண்டும். இந்த விஷயத்தில் நாம் எல்லோரும் அவர்களுக்கு அளித்து வரும் ஊக்கமும் ஆதரவும் பாராட்டுதற்குரியதாக இருக்கின்றது. பெண்களின் சுயமுயற்சியில், முன்னேறிச் செல்ல வேண்டும் என்ற உத்வேகமும் மிக உயர்ந்த நிலையில் இருக்கின்றன என்றே சொல்லவேண்டும். வேலைவாய்ப்பு மற்றும் இதர விஷயங்களில் கூடுதல் வாய்ப்புக்கள் பெண்களுக்கு ஏராளமான சலுகைகள் அரசுகளாலும் தனியார் நிறுவனங்களாலும் வழங்கப்பட்டு வருகின்றன. இருந்தபோதிலும் பெண்களின் வாழ்க்கை தரம் எதிர்பார்த்த அளவிற்கு மாறியிருக்கிறதா, உயர்ந்திருக்கிறதா என்பதுதான் இப்போதைய கேள்வி.

இந்தியா ஒரு ஏழை நாடு என்று சொல்லப்படுகின்றது. இந்த கூற்றை நான் ஒருபோதும் ஏற்றுக் கொள்வதில்லை. இந்தியா ஒரு வளர்ந்துவிட்ட நாடு என்றே சொல்ல வேண்டும். மிக குறைந்த அளவிலான மக்கள் மட்டுமே அடிப்படை வசதிகளை முழுமையாக அனுபவிக்க இயலாத சூழ்நிலையில் இருந்து வருகின்றார்கள். இதற்கிடையில் இந்திய பெண்கள், தம்முடைய அன்றாட நடைமுறை வாழ்க்கையில் எல்லா வழிகளிலும் பல்வேறு விதமான இடர்பாடுகளையும் குறைபாடுகளையும் சந்தித்தே வருகின்றார்கள். பெண்கள் இன்றளவும் பல்வேறு இடங்களில் அவமதிப்புக்குள்ளாக்கப்பட்டு உடலாலும் உள்ளத்தாலும் துன்புறுத்தப்பட்டு வருகின்றார்கள். ஆகவே அனைத்து பெண்களும் இன்றைய தேதியில் சமூக, பொருளாதார, குடும்ப அடிப்படையில் தன்னிறைவைப் பெற்று பெருமையுடன் வாழ வைக்கப்பட வேண்டியது அவசியமாகும்.

இந்திய அரசியல் அமைப்புச்சட்டம், சட்டம் இயற்றும் மன்றங்கள் மற்றும் நீதிமன்றங்கள் ஆகிய மூன்று அடுக்கு இயக்கங்களும் பெண்களின் மேம்பாட்டிற்காக எடுத்துள்ள பல்வேறு முயற்சிகளை நாம் அறிந்து கொள்ளவேண்டும். இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் ஏராளமான பிரிவுகளில் பெண்களின் உரிமையை நிலை நாட்டுவதற்காகவும், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும, பெண்களுக்கு சம உரிமை அளிப்பதற்காகவும் ஏராளமான பிரிவுகள் இருக்கின்றன. இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 14, 15, 15 (1), 16, 39 39A, 42, 46, 47, 51AE, 243(D4), 243 (T4), 243 (D3) ஆகிய பிரிவுகள் பெண் கள் பாதுகாப்பு அம்சங்களில் தொடர்பு கொண்டவையாக உள்ளன. குறிப்பாக பிரிவு 243 (T3), 243 (D4) மற்றும் 243 (T4) ஆகிய பிரிவுகள் பெண்கள் உள்ளாட்சி அமைப்புகளில் உறுப்பினர் களாகவும் தலைவர்களாகவும் இருப்பதற்கான உரிமையையும் தகுதிகளையும் வரையறை செய்கின்றன.

இந்த நேரத்தில் இந்திய அரசியல் அமைப்புச்சட்டத்தைப் பற்றி கொஞ்சம் நான் கூறி கொள்ள விரும்புகின்றேன். இந்தியாவிற்கு முன்பாகவே இங்கிலாந்தில் ஒரு அரசியல் அமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது. ஆனால் அது சரியான அங்கீகாரத்திற்கு உட்படுத்தப்படவில்லை. அதேசமயம் இந்திய அரசியல் அமைப்புச்சட்டம், பல்வேறு மாற்றங்களுக்கு அவ்வப்போது உட்படுத்தப்பட்டாலும் இது ஒரு மிகச்சிறந்த அரசியல் அமைப்புச் சட்டமாக இன்றளவும் போற்றப்பட்டு வருகின்றது.

இந்திய பாராளுமன்றத்திலும் இதுவரை பெண்களின் உரிமையை நிலைநிறுத்துவதற்காகவும், பெண்களின் சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்காகவும். பெண்களுக்கு சம உரிமை வழங்குவதற்காகவும் பல்வேறு சட்டவடிவுகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு சட்டங்களாக வெளியிடப்பட்டுள்ளன. இதுவரை பெண்கள் தொடர்பான 43 சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. ஆகவே, இந்திய நாட்டின் பெண்களைப் பொறுத்தமட்டில் அவர்களுக்கான உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை வழங்குவதில் எந்தவிதமான பாராபட்சமும் ஆண்களோடு ஒப்பிடும்போது ஏற்படவில்லை என்பதை உறுதியாகச் சொல்லலாம். “தியரி ஆப் டிஸ்கிரிமினேஷன்” என சொல்லப்படுகின்ற பாகுபாட்டு தத்துவம் பெண்களுக்கான உரிமைகளை பொறுத்தமட்டில் எப்போதும் எழவில்லை.

பல்வேறுவிதமான சட்ட வடிவங்களின் மூலமாக பெண்கள் இதுகாறும் அனுபவித்து வந்த வரதட்சனை கொடுமை, குடும்ப வன்முறை, இம்மோரல் டிராபிக் எனச் சொல்லப்படுகின்ற பெண் கடத்தல் மற்றும் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுதல், கணவன் இறந்தவுடன் அவருடன் உடன்கட்டை ஏறுதல், கருவிலிருக்கும் குழந்தையின் பால் வகையை அறிய முற்படுதல் ஆகிய பல்வேறு விதமான பெண்களுக்கு எதிரான குற்றங்களை குறைப்பதற்காகவும் உரிய தண்டனைகள் வழங்குவதற்காகவும் சட்டங்கள் தொடர்ந்து இயற்றப்பட்டு வந்துள்ளன. ஆகவே பெண்களுக்கு எதிரான குற்ற நடவடிக்கைகளை பெருமளவில் குறைப்பதற்கும் தடுப்பதற்கும் சட்டங்கள் இயற்றுவதில் இந்திய பாராளுமன்றம் மிகச் சிறப்பாகவே செயல்பட்டு வந்துள்ளது.

சட்டங்களை இயற்றும் வல்லமைப் பெற்ற பாராளு மன்றம், பெண்கள் நலனுக் கான சட்டங்களை இயற்றும் போது அவற்றை அதாவது மகளிர்-பிரத்யேகம் (Women-Specific) மற்றும் மகளிர்-சம்பந்தப்பட்ட (Women - Related) இரண்டு பிரிவுகளாக பிரித்து அதன்படி நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது. மகளிர்-பிரத்யேகம் என்ற பிரிவின்கீழ், பெண்களை பாதுகாத்து அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதை முக்கிய குறிக்கோளாக கொள்ளப்பட்டது. இரண்டாவது வகையில் பெண்களின் கூடுதல் பாதுகாப்பு, சுதந்திரம், உரிமைகள் முதலியவற்றை மேம்படுத்தும் விதமான பொதுவான பெண்கள் சம்பந்தமான சட்டங்கள் இயற்றப்பட்டன.

இந்திய அரசியல் அமைப்பு சட்டம் மற்றும் சட்டம் இயற்றும் அதிகாரம் பெற்றுள்ள பாராளுமன்றம் ஆகிய இரண்டு அமைப்புகளுமே இந்திய நாட்டில் பெண்களுக்கான நலவாழ்வை வழங்குவதில் முன்னெடுத்து சென்றுள்ளன. மூன்றாவது அமைப்பான “கோர்ட் ஆப்லா ஆப் ஜஸ் டிஸ்” என்று சொல்லப்படுகின்ற நீதிமன்றங்களில் குறிப்பாக இந்திய உச்சநீதிமன்றத்தில் இதர நாடுகள்கூட போற்றும் வகையிலான மிகச்சிறந்த பெண்கள் பாதுகாப்பு குறித்த சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.

உச்சநீதிமன்றத்தில் பெண்கள் நலனுக்காக பிரத்யேகமாக வழங்கப்பட்டுள்ள சில முக்கியமான தீர்ப்புகளை இங்கே குறிப்பிட வேண்டுகின்றேன். பெண்கள் நலனுக்காக உச்சநீதிமன்றம் இயற்றிய மிக உன்னதமான தீர்ப்புகள் சிலவற்றை பற்றி இங்கே உங்களின் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்.

உச்சநீதிமன்றம் வழங்கிய மிக முக்கியமான தீர்ப்புகளில் முதலாவதாக நான் சொல்லப்போவது என்னவென்றால் 1981-ம் ஆண்டில் ஏர் இந்தியா சம்பந்தப்பட்ட வழக்கில் தர்கீஷ் மிஷ்ரா என்ற பெண் தொடர்பான தீர்ப்பு, இந்தியா மற்றும் சர்வதேச அளவில் பெண்களின் மரியாதையை பெருமளவில் உயர்த்தியது. இந்த தீர்ப்பில், ஒரு பெண் அவர் பெண் என்ற ஒரே காரணத்திற்காக வேலை மறுக்கப்படக்கூடாது. அடுத்தபடியாக ஏர் இந்தியா நிறுவனத்தில் பணிபுரியும் ஏர் ஹோஸ்டஸ் பதவியில் உள்ள பெண்மணிகளை அவர்கள் ஒரு குறிப்பிட்ட வயதை எய்தியவுடன் அல்லது திருமணம் முடிந்தவுடன் பணியிலிருந்து அவர்களை விடுவிப்பது சட்டவிரோதமாகும், ஆகியவை இந்த வழக்கில் வழங்கப்பட்ட மிக முக்கியமான தீர்ப்புகளாகும். உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு கையாளப்பட்டபோது இந்திய அரசியல் அமைப்புச்சட்டப்பிரிவு 14 மற்றும் 16 ஆகியவற்றின் சரத்துக்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு பெண்களுக்கு எதிரான முடிவுகள் தகர்க்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அடுத்ததாக 2002-ம் ஆண்டில் லலிதா சுந்தரி என்னும் பெண்மணிக்கு எதிராக டிவிஷன் பென்ச்சில் தொடரப்பட்ட வழக்கு ஒன்றில், ஒரு கல்வி நிறுவன குழுவில் இருந்த ஆண் உறுப்பினர்கள் பெண்களை அந்த குழுவில் பணியில் அமர்த்தக் கூடாது, அவர்களுக்கு அந்த தகுதி கிடையாது. கல்வி விஷயங்களை கையாளுவதில் அவர்களுக்கு போதிய ஆளுமை கிடையாது என வாதாடினார்கள். ஆனால் இந்த வாதத்தில் உண்மைகள் இல்லை எனவும், கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் பெண்களுக்கும் சம உரிமை உண்டு என்றும் சம்பந்தப்பட்ட இரண்டு பெண்மணிகளும் சரியான தகுதிகளை உடையவர்களாக இருக்கின்றார்கள் எனவும் தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்து தொடர்புடைய இரண்டு பெண்களுக்கும் கல்வி குழுவில் இடம் அளிக்க வேண்டுமென டிவிஷன் பென்ச் உத்திரவிட்டது.

2014-ம் ஆண்டில் மும்பை ஹைகோர்ட் மூலமாக உச்சநீதிமன்றத்திற்கு தீர்ப்புக்காக வந்த வல்சம்மா வழக்கில் பாலியல் சமதர்மதத்துவம் பற்றியதான அற்புதமான தீர்ப்பு ஒன்று வழங்கப்பட்டது. “ஜென்டர் ஈக்குவாலிட்டி” என்று சொல்லப்படுகின்ற பாலியல் சமஉரிமை அதாவது ஆண்களும் பெண்களும் உரிமைகளை பொறுத்தமட்டில் சரிசமமான சந்தர்ப்பங்களை பெற வேண்டும். இதில் எந்த பாகுபாடும் இருக்கக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு பெண்களின் பெருமையை பேணிகாத்தது.

அதேபோல் 1996-ம் ஆண்டில் மும்பை ஹைகோர்ட் மூலம் உச்சநீதிமன்றத்திற்கு வந்த ஒரு வழக்கு கேரளாவைச் சேர்ந்த சினி காஸ்டியூம் மேக் அப் ஆர்டிஸ்ட் அன்ட் ஹேர் டிரசர்ஸ் அசோசியேஷனிலிருந்து பெறப்பட்டதாகும். இந்த அசோசியேசனில் வெகுகாலமாக பெண்களுக்கு மேக்அப் போடுவதற்கும் பெருமளவில் ஆண்களே செயல்பட்டு வந்தார்கள். அந்த அசோசியேசன் உறுப்பினர்கள் அனைவரும் ஆண்கள் மட்டுமேயாகும். பின்வந்த காலங்களில் இந்த அசோசியேசன் மூலமாக மேக் அப் செய்வதற்காக பெண் கலைஞர்களை அங்கிருந்த ஆண் உறுப்பினர்கள் அங்கத்தினர்களாக சேர்த்துக் கொள்ள மறுத்துவிட்டார்கள். பெண்கலைஞர்களுக்கு உறுப்பினர்களாக சேர்ந்து கொள்வதற்கு தகுதியில்லை என அவர்கள் வாதாடினார்கள். இந்த வழக்கில் வாதங்களை கூர்ந்து கவனித்த உச்சநீதிமன்றம் அசோசியேசனின் உபவிதிகள் 4 மற்றும் 6-ல் குறிப்பிடப்பட்டிருந்த பெண்களுக்கு எதிரான சில சரத்துக்களை நீக்கி, அசோசியேசனில் பெண்களும் உறுப்பினர்களாக சேர தகுதியுடையவர்களே என தீர்ப்பளித்து பெண் மேக்அப் கலைஞர்களுக்கான நீதியை நிலைநாட்டியது.

1996-ம் ஆண்டில் போயி சாத்தா கௌதம் வழக்கில், பெண்களின் பெருமையை நிலைநாட்டுவதில் உச்சநீதிமன்றம் எடுத்துக்கொண்ட முயற்சியும் வழங்கிய தீர்ப்பில் உபயோகித்த உரைக்கின்ற உன்னதமான வார்த்தைகளும் மறக்க முடியாதவையாகும். “சமுதாய வாழ்வில் பெண்கள் தனித்தன்மை மிக்க குணநலன்களை கொண்டவர்களாக அதாவது தாயாகவும், தமக்கையாகவும், மகளாகவும், சகோதரியாகவும், மனைவியாகவும் இருக்கின்றவர்கள். அவர்களை வாராந்திர மாதாந்திர பத்திரிக்கைகளில் நடுப்பக்க விளம்பர பொருளாகவும், விளையாட்டு பொம்மைகளாகவும் பிரசுரிப்பதும், ஆபாச காரணங்களுக்காக அவர்களின் மரியாதையையும் அந்தஸ்தையும் சுரண்டுவதும் மிகவும் அநீதியான விஷயமாகும்”, என மிகவும் அற்புதமாக, அழுத்தம் திருத்தமான வார்த்தைகளை கொண்டு வழங்கப்பட்ட இந்த தீர்ப்பானது பெண்ணின் பெருமையை உயர்த்துவதாகவும், பெண்கள் சம்பந்தப்பட்ட கண்ணியம் பற்றி சிந்திக்க தூண்டுகின்ற தீர்ப்பாகவும் அமைந்தது.

1963-ம் வருடத்திய கரக்சிங் தொடர்பான வழக்கில், உச்சநீதிமன்றம் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 21-வது பிரிவை நிலை நிறுத்தி. ஒவ்வொரு பெண்ணும் தன்னுடைய உடல் மற்றும் உடல் பாகங்களை பாதுகாத்துக் கொள்ளும் உரிமையை முழுமையாக பெற்றிருக்கின்றார் என்று தீர்ப்பளித்திருக்கின்றார்கள். இந்த தீர்ப்பில் “பெண்கள் தங்களுடைய உடலையும், அவையவங்களையும் ஜனன உறுப்பையும் சேர்த்து பாதுகாத்துக்கொள்ளும் உரிமையைப் பெற்றிருக்கின்றார்” என உச்சநீதிமன்றம் கூறியிருக்கின்றது.

2000-மாவது ஆண்டில், ஒரு பங்களாதேசைச் சேர்ந்த வெளிநாட்டு பெண் கொல்கத்தா ரயில் நிலையம் ஒன்றில் ரயில்வே ஊழியர் ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு வழக்கு உச்சநீதிமன்றத்திற்கு வந்தபோது, பாதிக்கப்பட்டவர் வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்பதால் இதில் ரயில்வே ஊழியர்மீது நடவடிக்கை எடுக்க இயலாது என கீழமை நீதிமன்றங்களில் சொல்லப்பட்டது. ஆனால் உச்சநீதிமன்றம், குற்றமானது கொல்கத்தாவிற்கு அருகில் ரயில் நிலையம் ஒன்றில் இந்திய பிரஜை அதுவும் ரயில்வே ஊழியர் ஒருவரால் யாத்திரி நிவாஸில் செய்யப்பட்டதால், சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு தண்டனையும் பாதிக்கப்பட்ட வெளிநாட்டு பெண்ணுக்கு நிவாரணமும் வழங்கப்பட வேண்டியது மிகவும் அவசியம் என்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பின் முக்கியத்துவம் என்னவென்றால், இந்த உலகில் பெண் என்பவள் எங்கு பாதிக்கப்பட்டாலும் எப்படி பாதிக்கப்பட்டாலும் அது கண்டிக்கத்தக்கதாகவும் தகுந்த நிவாரணம் பெறத்தக்கதாகவும் இருக்க வேண்டும் எனவும் உணர்த்தப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்புகளில் உயர்ந்த ஒன்றாகவும் இதுவும் பாராட்டப்படுகின்றது.

உச்சநீதிமன்றத்தில், விசாகா வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பானது பெண்ணின் பெருமையை நிலைநாட்டுவதாகவும் இதரநாட்டு நீதிமன்றங்களும் சட்டத்துறை வல்லுனர்களும்கூட பாராட்டிடும் படியாகவும் அமைந்திருந்தது. இதில் மகிழ்ச்சிக்

Tags: News, Art and Culture, Education

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top