கண் சிகிச்சை மற்றும் சர்க்கரை நோய் மருத்துவ முகாம்!

கண் சிகிச்சை மற்றும் சர்க்கரை நோய் மருத்துவ முகாம்!

எஸ். இராமச்சந்திரபுரம் கலைமகள் மேல்நிலைப்பள்ளியில் சங்கரா கண்மருத்துவமணை (கிருஷ்ணன்கோவில்) எஸ். இராமச்சந்திரபுரம் ஜவுளி வியாபாரிகள் சங்கம் இணைந்து கண்சிகிச்சை மற்றும் சர்க்கரை நோய் தடுப்பு. இலவச மருத்துவ முகாமை கலசலிங்கம் பல்கலைக்கழக இயக்குநர் முனைவர் எஸ். சசிஆனந்த் துவக்கி வைத்தார்கள்.

நிகழ்ச்சியில் எஸ். இராமச்சந்திரபுரம் ஜவுளி வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் திரு எஸ். பி. நாராயணன் செயலாளர் திரு. ஆதி நாராயணன், திரு க. தவசியானந்தம் முன்னாள் ஊர்த்தலைவர் திரு. மா. மாடசாமி செய்தி தொடர்பாளர் அகில இந்திய சாலியர் மகாஜனசங்கம் சிவகாமிநாதன் தலைமையாசிரியர் கலைமகள் மேல்நிலைப்பள்ளி பணியாளர் சோமசுந்தரம் மற்றும் ஆட்சியர் பெருமக்கள் பெரும்திரளாக கலந்துகொண்டார்கள்.

விழாவில் சிறப்பு விருந்தினராக கலசலிங்கம் பல்கலையின் பதிவாளர் திரு. முனைவர் வாசுதேவன் அவர்கள் கலந்துகொண்டு மருத்துவமுகாமை சிறப்புற செய்தார்கள். மேற்படி மருத்துவமுகாமில் 500க்கும் மேற்பட்டவர்களுக்கு சர்க்கரைநோய் கண்டறியப்பட்டு சுமார் ஒரு இலட்சம் மதிப்பிலான மருந்து மாத்திரைகள் இலவசமாக கொடுக்கப்பட்டன.

மேலும், கண் அறுவைசிகிச்சைக்கு 31பேர் தேர்வு செய்யப்பட்டனர். திரு. எம். காளிமுத்து அவர்கள் முடிவில் நன்றி கூறினார்கள் முன்னதாக நிகழ்ச்சிக்கு வருகைபுரிந்து அனைவரையும் திருநெல்வேலி எஸ். பி. நாராயணன் தூத்துக்குடி ஆதி நாராயணன் இருவரும் வரவேற்றார்கள்.

மருத்துவ முகாமில் சங்கராமருத்துவமனை மருத்துவர் சுப்பிரமணியம் சர்க்கரைநோய் நிபுனர் மருத்துவர் பாரி இராஜபாளையம் மருத்துவர் சி. இராமசாமி குழந்தைகள் நலமருத்துவர் சின்னமனூர் மருத்துவர் எம். பழனிச்சாமி அரசுமருத்துவர் திருவில்லிபுத்தூர் ஆகியோர் கலந்துகொண்டு மருத்துவமுகாமில் கலந்துகொண்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து மருத்துவ ஆலோசனையும் வழங்கினார்கள். மருத்துவமுகாமில் பேசிய திரு. எம். காளிமுத்து சின்னமனூர் அவர்கள் எதிர்காலத்தில் மிகப்பெரிய மருத்துமனையின் மருத்துவர்களை அழைத்து வந்து எஸ். இராமச்சந்திரபுரம் பகுதி மக்களுக்கு மாபெரும் இலவச மருத்துவமுகாம் நடத்தப்படும் என்று பேசினார்கள்.

மருத்துவ முகாமை தலைமை ஏற்று தொடங்கி வைத்து பேசிய சசிஆனந்த் அவர்கள் எனது தாத்தா கல்விவள்ளல் அவர்கள் குறித்து இந்த பின் தங்கிய பகுதி மக்களுக்காக ஒரு கல்லூரியை நிறுவி படிப்படியாக அதை வளர்ச்சிசெய்து இன்று ஒரு பல்கலைக்கழகமாக அதை உயரச்செய்து இன்று உலக அளவில் பேசப்படும் ஒரு பல்கலைகழகமாக கலசலிங்கம் பல்கலைக்கழகம் உயர்ந்துள்ளது என்று குறிப்பிட்டார்கள். மேலும் இலவச மருத்துவமுகாமை நடத்தும் ஜவுளி வியாபாரிகள் சங்கத்தின் நிருவாகிகள் அனைவரையும் பாராட்டினார்.

Tags: News, Lifestyle

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top