மதுரையில் ஒரு அதிசய கிராமம் அண்டமான்!

மதுரையில் ஒரு அதிசய கிராமம் அண்டமான்!

செருப்புகளை வைத்துக் கொண்டு, அதனைக் காலில் அணியாமல், கைகளில் ஏந்திக்கொண்டு, முள் குத்தினாலும் அதனை எடுத்துப்போட்டு செல்லும் மக்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அதுவும் நமது மதுரை வட்டாரத்தில்...

அண்டமான்..! இந்த ஊரின் பெயர் ஒரு வித்தியாசமான அதிசயத் தைச் சுமந்து கொண்டிருக் கிறது. மதுரைக்கு வடக்கே உள்ள காஞசரம்பேட்டை என்ற ஊரினை அடுத்துள்ள சிறய ஊர் தான் அண்டமான். ஊருக்கு வடக்கே அழகர் மலையின் அடிவாரத்தில், பசுமை மடியில் தவழ்ந்து கொண்டிருக்கிறது இந்த கிராமம். ஆதிகாலத்தில் இந்த மலையில் வாழ்ந்த புலி போன்ற காட்டு விலங்கு களின் பிடியிலிருந்து தப் பிப்பதற்காக சில மான்கள் இந்த ஊரில் தஞ்சம் அடைந் திருக்கின்றன. தங்களை அண்டி வந்த மான்களை விரட்டாமல் அதற்கு உணவு கொடுத்து வளர்த்திருக் கிறார்கள் இந்த ஊர் மக்கள். அதனால் இந்த ஊருக்கு அண்டமான் என்ற லாஜிக் கான பெயர்க் காரணம்! இந்த ஊரில் தான் மக்கள், ஊருக் குள் செருப்பு போடாமல் கை களில் ஏந்திக் கொண்டு சென்று, ஊரின் எல்லையைக் கடந்த பின் காலில் அந்த செருப்புகளை அணிந்து கொள்கிறார்கள். சைக்கிள், பைக் போன்ற வாகனங் களில் செல்பவர்கள் கூட செருப்பை வண்டியில் வைத்துக் கொண்டும், காரில் செல்பவர் கள் காருக்குள்ளே செருப்பு களைக் காலுக்கு அருகில் வைத்துக் கொண்டும், கார் ஊர் எல்லை யைத் தாண்டியவுடன் தான் செருப்புகளை, காலுக்குள் நுழைய அனு மதிக்கிறார்கள்.

ஏன் இந்தக் கட்டுப் பாடு? என்ன காரணம்..?

இந்த ஊரையே மக்கள் தெய்வமாக நினைப்பது தான்.! இந்த ஊரில் காவல் தெய்வமாக வீற்றி ருக்கும் கருப்பசாமி, இந்த ஊரின் எல்லைக்குள் செருப்பு அணியக்கூடாது என்று உத்தரவிட்டிருக்கிறார் என் கின்றனர் ஊர் மக்கள். இந்தக் கட்டுப்பாடு ஏறக்குறைய 300 ஆண்டுகளாகத் தொன்று தொட்டுத் தொடர்கிறதாம். கருப்பசாமியின் உத்தரவை யும், ஊர்க்கட்டுப் பாட் டையும் மீறி, என்ன நடக்கிறது என்று பார்ப்போம் என்று வீராப்பு பேசிய வர்கள் அதற்கான தண்டனை அடைந் ததை, தங்கள் அனுப வங்களாக நம்மிடம் சொன்ன போது, மிகவும் திகிலாக இருந்தது. இந்த ஊரில் பெண் எடுத்து திருமணம் செய்தவர், இந்த ஊர்க் கட்டுப்பாட் டைக் காதில் வாங் காமல் செருப்பு அணிந்து சென்ற தால், படுத்த படுக் கையாகக் கிடந்து, மரணத்தின் வாயில் வரை சென்று, பின் அவரே மனம் திருந்தி, தான் செய்த தவறை ஒப்புக் கொண்டு, கருப்ப சாமியிடம் மன்னிப்புக் கேட் டதால், உயிர் பிழைத்திருக் கிறார் என்ற செய்தியை அவர் சொன்னதும், நம் கண்கள் கலவரத்துடன், நம் கால்களைக் கவனமாகப் பார்க்கிறது. நல்ல வேளை! ஊரு குள் நுழையும் போதே நம்மிடம் விஷயத்தைச் சொன்னதால், முன்னெச் செரிக்கையாக, காலில் அணிந்து வந்த செருப்பு களை, நமது வாக னத்தி லேயே விட்டு விட்டு வந்ததை எண்ணி ஆறுதல் பெருமூச்சு விட்டுக் கொண் டோம். ஊருக்குள் வருபவர் களுக்கும் இந்தக் கட்டுப் பாடு தான்! கட்டுப்பாட்டைப் பற்றித் தெரியாமல் ஊருக் குள் செருப்பு அணிந்து வரு பவர்களை மன்னித்து விடு வாராம் கருப்பசாமி! தேரிந்தே செய்தால்..  என்ன நடக்கும்? தெரிந்தே செய்த தப் பிற்கு, இந்த ஊர் கருப்ப ணசாமி கருணையே காட்டு வதில்லை! சில மரணங்கள் கூட அசம்பா விதமாக நடந்த தாகக் கூறும் போது, நம்மை அறியாமல் வியர்க்கிறது.

இந்த ஊரில் குடிசைகளே கிடையாது. நவீன வசதிகள் அனைத்தையும் அவரவர் வசதிக்கும், தேவைக்கும் ஏற்ப வைத்திருக்கிறார்கள். ஆனாலும், இங்கு இன்னு மொரு வித்தியாசமான நடை முறையும் வழக்கத்தில் உள் ளது. ஊரில் யாராவது இறந்து விட்டால், அவரது இறுதிச் சடங்கு முடியும் வரை, யாரும் வேலைக்கு கூட செல்வது கிடையாது. இதைவிட முக்கியமான செய்தி ஒன்று இருக்கிறது. அவ்வாறு இறந்தவர்கள் வீட்டில் எந்த வாத்தியங் களும் இசைப்பதில்லை. அதே போல், எந்த விதமான ஆடம்பரமும் இல்லாமல், நம் முந்னோர்கள் பின் பற்றிய முறைப்படி, இறந்த வரின் உடலை, சாதாரண தென்னங் கீற்றுப் பாடையில் வைத்தே இடுகாட்டுக்கு கொண்டு செல்கின்றனர். இறந்தவருக்காக செய்யப் படும் சடங்குகளுக்காக, ஊர் மக்கள் அனைவரும், வீடு வாரியாக குறிப்பிட்ட தொகையை வரியாகச் செலுத்துகிறார்கள். அந்தப் பணத்தில்தான் இறுதிச் சடங்குகளுக்கான செல வினைச் செய்கிறார்கள். அந்தக் கணக்கை, பதிவேட் டில் எழுதி வைக்கிறார்கள்.

இதை வித்தியாசம் என்று சொல்வதை விட, இது தான் நம் முன்னோர்கள் பின் பற்றிய பாரம்பரிய நடை முறை! ஓற்றுமையை வலி யுறுத்தி ஊர் முழுக்க கத்திக் கொண்டிருப்பதைவிட, இங்கு நாம் கற்றுக்கொள்ள வேண்டிய நடைமுறைகள் ஏராளம்! மொத்தத்தில் அண்டமான் இன்றைய சமூகத்திற்கு அற்புத விஷயங்களை உணர்த்தும் அதிசயமான கிராமம் தான்!

Tags: News, Madurai News, Lifestyle

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top