தீபாவளியன்று பைரவா-வின் டீசர் - அதிகாரப்பூர்வ தகவல்

தீபாவளியன்று பைரவா-வின் டீசர் - அதிகாரப்பூர்வ தகவல்

இளையதளபதி விஜய் நடிப்பில் பரதன் இயக்கி வரும் 'பைரவா' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அடுத்த மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைய உள்ளது.

 
சமீபத்தில் வெளியான இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மாபெரும் வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்ததாக இந்த படத்தின் டீசரை விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
 
இந்நிலையில் 'பைரவா' படத்தின் டீசர் வெளியாகும் தேதி குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்தின் டீசர் வரும் அக்டோபர் 30ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது. அன்றைய தினம் தீபாவளி என்பதால் விஜய் ரசிகர்களுக்கு அன்று இரட்டை விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
 
மேலும் இந்த படத்தின் இசை வெளியீடு இவ்வருட இறுதியில் வெளியாகும் என்றும் படத்தை வரும் பொங்கல் தினத்தில் வெளியிடவும் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
 
விஜய், கீர்த்தி சுரேஷ், சதீஷ், ஜெகபதிபாபு, டேனியல் பாலாஜி, சுதன்ஷி பாண்டே, உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். விஜயா புரடொக்ஷன்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக இந்த படத்தை தயாரித்து வருகிறது.

Tags: News, Hero, Star

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top