அப்துல்கலாம் ஐயாவின் கனவை நனவாக்கும் டிஜிட் ஆல்!

அப்துல்கலாம் ஐயாவின் கனவை நனவாக்கும் டிஜிட் ஆல்!

‘இன்று, இணையதளமும், டெக்னாலஜியும் இல்லாமல் ஒரு அணுவும் அசயாது. அந்தளவிற்கு டிஜிட்டல் வாழ்க்கையில் நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம். இனி, வரவிருக்கும் காலங்களிலும், இணையதளம் மற்றும் டெக்னாலஜி இல்லாமல் எதுவும் செய்யமுடியாது என்பதுதான் நிதர்சனமான உண்மை.

இது இன்றைய தலைமுறையினருக்கு அத்துபடியான போதிலும், பல பெரியவர்களுக்கும், மூத்த குடிமக்களுக்கும் இதனை எப்படி தொழிற்சார்ந்து பயன்படுத்துவது, டெக்னாலஜி மூலமாக எப்படி வியாபாரத்தை பெருக்கிக் கொள்வது என்பதை அறியாமல் சிரமப்படுகிறார்கள்.’ என தொடங்கினார் டிஜிட் ஆல்லின் தலைவர் திரு. ஜெ.கே.முத்து அவர்கள். 
 
இந்தியாவின் இரண்டாம் பெரிய வர்த்தக சங்கமான தமிழ்நாடு சேம்பர் ஆப் காமர்ஸில் மூத்த உறுப்பினர்கள் மற்றும் பொது மக்களுக்கு பயன்படும் வகையில் கடந்த 2015ம் ஆண்டு ஜூலை 18ம் தேதியில் மறைந்த மாண்புமிகு முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்களால் கடைசியாக துவங்கி வைக்கப்பட்ட அமைப்பு தான் டிஜிட் ஆல்.
 
இதைப் பற்றி மேலும் அவர்: ‘எல்லா மக்களுக்கும் டிஜிட்டல் தொழிற்நுட்பத்தை கொண்டு போய் சேர்க்க வேண்டுமென்பது அப்துல் கலாம் ஐயா அவர்களின் கனவுகளில் ஒன்று. அக்கனவை நனவான வேண்டுமென்கிற உறுதிமொழியை எடுத்துக் கொண்டு, ஐயா அவர்களின் தலைமையில் இந்த அமைப்பினை துவங்கினோம்.
 
தொழிற்நுட்பம்தான் உலகத்தை இயக்கும் சக்தி. இந்த சக்திதான் இனியும் உலகை இயக்கப்போகிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இன்று எந்த தொழிலிலும் இணையதளம் நுழைந்துவிட்டது, எனவே, டெக்னாலஜியில்லாமல் இன்று தொழில் செய்வது என்பது கடினம். மேலும், இன்று விற்பனை வரி, ஜிஎஸ்டி, இன்வாஸ் பதிவு செய்வதும் எல்லாம் ஆன்- லைனாக மாறிவருகிறது. இது இளம் தலைமுறையினருக்கு அசுர வளர்ச்சியளித்த போதிலும், மூத்த தொழிலதிர்களுக்கு ஒரு பயமாகவே நிலவுகிறது. இதை அவர்களிடம் இருந்து அகற்றி அனைவருக்கும் டிஜிட்டல் என்கிற நோக்கத்தோடு சாமானிய மக்களுக்கும் புரிந்துகொள்ளும் வகையில் கடந்த ஓராண்டாக வகுப்புகளை நடத்தி தற்போது இரண்டாம் ஆண்டிற்குள் அடியெடுத்து வைக்கவுள்ளோம்.
 
இந்த டிஜிட் ஆல்லில் மூத்த குடிமக்கள், குடும்பத் தலைவிகள், தொழிற்நுட்பம் பற்றி அறிந்துகொள்ள விரும்புவோர், இளைஞர்கள், கிராமப்புரங்களில் உள்ள விவசாயிகள் என அனைவருக்கும் கொண்டு சேர்க்க வேண்டுமென்கிற உறுதிமொழியை மறைந்த அப்துல்கலாம் ஐயாவிடம்  எடுத்துக்கொண்டு சேம்பர் ஆஃப் காமர்ஸில் வகுப்புகளை மாதம் ஒரு முறையும் தியாகராசர் கல்லூரியில் பயிற்சி வகுப்புகளை 3 மாதத்திற்கு ஒரு முறையும் நடத்திவருகிறோம். அத்தோடு இதில் தியாகராசர் கல்லூரி மற்றும் டேக் பெருமாட்டி கல்லூரி மாணவர்களும் தன்னார்வப் பணியாளர்களாக உதவிப் புரிகிறார்கள். இந்த கூட்டத்தில் இந்த மாதத்தில் தொழிற்நுட்பத்தில் என்னென்ன வளர்ச்சிகள் நடந்துள்ளது, என்பதை விவரித்துவிட்டு அவர்களுக்கு அடிப்படையான விஷயங்களைப் பற்றி வகுப்புகளில் பயிற்றுவிக்கிறோம். அதனைத் தொடாந்து வாட்ஸ் ஆஃப், இ-மெயில் மூலமாகவும் தகவல்களை அனுப்பிக்கொண்டே இருப்போம்.
 
வரவிருக்கும் செப்டம்பர் மாதம் 24ம் தேதி டிஜிட் ஆல்-லின் முதலாமாண்டின் நிறைவு விழாவை சேம்பர் ஆஃப் காமர்ஸில் ஏற்படுத்தியுள்ளோம். இதன் சிறப்பு விருந்தினராக அப்துல்கலாம் ஐயா அவர்களின் அறிவியல் ஆலோசகர் திரு. பொன்ராஜ் அவர்கள் கலந்துகொள்கிறார். அதில் இந்த ஆண்டிற்கான புதிய உறுப்பினர்களை சேர்க்கும் நிகழ்வும், தொழிற்நுட்பம் பற்றிய இலவச வகுப்பு ஒன்றையும் ஏற்பாடு செய்துள்ளோம்.’ எனக் கூறினார்.
 
தொடர்புக்கு: 9345228184

Tags: News, Madurai News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top