ஜல்லிக்கட்டின் அவரச சட்டத்தில் அரசாணை பிறப்பித்துள்ள விதிமுறைகள்!

ஜல்லிக்கட்டின் அவரச சட்டத்தில் அரசாணை பிறப்பித்துள்ள விதிமுறைகள்!

1. ஜல்லிக்கட்டு நடத்த விரும்பும் தனி நபர், அமைப்பு அல்லது குழு, கலெக்டரிடம் முன்ன தாகவே விண்ணப்பிக்க வேண்டும். கலெக்ட ரின் அனுமதி கிடைத்ததும், ஜல்லிக்கட்டு நடைபெறும் நாள், இடம் ஆகியவற்றை அரசு வெளியிடும்.

2. அனுமதி தரும் கலெக்டர், போட்டி நடக்கும் இடத்தை பார்வையிட வேண்டும்.

3. போட்டியில் பங்கேற்கும் காளைகள், மாடுபிடி வீரர்கள் குறித்த விபரத்தை அளித்து, கலெக்டரிடம் முன்அனுமதி பெற்றிருக்க வேண்டும்.

4. வருவாய், கால்நடை பராமரிப்பு, சுகாதாரம் மற்றும் காவல் துறையினர் இடம்பெற்ற, ஜல்லிக் கட்டு கமிட்டியை, கலெக்டர் அமைத்து, ஜல்லிக் கட்டில் விதிமுறைகள் கடைபிடிக்கப் படுவதை, கண்காணிக்க வேண்டும்.

5. ஜல்லிக்கட்டு காளைகள், நோயால் பாதிக்க பட வில்லை; போதை பொருட்களுக்கு ஆட்பட வில்லை என்பதை, காவல் துறை நிபுணர்கள் உதவியுடன், கலெக்டர் உறுதி செய்ய வேண்டும்.

6. காளைகள் களத்திற்கு கொண்டு வரப்படுவதற்கு முன், 20 நிமிடங்கள் ஓய்வு அளிக்கப்பட வேண்டும். காளைகள் நிறுத்தப்படும் இடத்தில், அவற்றுக்கு இடையே, 60 சதுர அடி அளவில், போதிய இடைவெளி அளிக்க வேண்டும்.

7. காளைகள் பாதுகாப்பாக உணர, காளையின் உரிமையாளர் அருகில் இருக்க வேண்டும். காளை கள் நிறுத்தப்படும் இடத்தில், மழை, வெயில் பாதிக் காமல் கூடாரம் அமைக்க வேண்டும்.

8. காயம் இருக்கும் காளைகளை, போட்டியில் பங்கேற்க தடை செய்ய வேண்டும்.

9. ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதியின் முக்கிய இடங்களில், கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப் பட்டு, காட்சிகள் பதிவு செய்யப்பட வேண்டும்.

10. போதை பாதிப்புக்கு உள்ளான காளையை, போட்டியில் பங்கேற்க அனுமதிக்கக் கூடாது.

11. காளைகளை பரிசோதனைசெய்யும் இடம், ஷாமியானா வசதியுடன் இருக்க வேண்டும்* போட்டி நடக்கும் மைதானம், குறைந்தபட்சம், 50 சதுர மீட்டர், இடவசதி கொண்டதாக இருக்க வேண்டும்.

12. வாடிவாசலை மறித்தபடி, போட்டியாளர்கள் நிற்கக் கூடாது. காளையின் திமில் பகுதியை பிடித்தபடி, 15 மீட்டர் அல்லது, 30 வினாடிகள் அளவுக்கு அல்லது மூன்று துள்ளல்கள் வரை,போட்டியாளர்கள் காளையுடன் ஓட வேண்டும்.

13. போட்டியாளர்கள், காளையின் வால், கொம்பு ஆகியவற்றை பிடித்து, அதன் ஓட்டத்தை தடுத்து நிறுத்தக் கூடாது.

14. வாடிவாசல் பகுதியில் இருந்து, 15 மீட்டர் துாரத்தில், பார்வையாளர்கள் மாடம் அமைக்கப்பட வேண்டும்.

15. பொதுப்பணித்துறை அதிகாரிகளின் சான்றிதழ் பெற்று, பார்வையாளர் மாடத்தை அமைக்க வேண்டும்.

16. போட்டியாளர்களை, மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். பிரத்யேக சீருடை, அடையாள அட்டை அணிந்து இருப்பதை, கலெக்டர் உறுதி செய்ய வேண்டும்.

17. போட்டியாளர்கள் மற்றும் காளைகளின் கூடுதல் மருத்துவ வசதிக்காக, ஆம்புலன்ஸ், டாக்டர்கள் போதிய அளவில் இருப்பதை, கலெக்டர் உறுதி செய்ய வேண்டும்.

Tags: News, Madurai News, Art and Culture

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top