ஆதார் அட்டைக்கு கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை ஆதார் ஆணையம் தகவல்

ஆதார் அட்டைக்கு கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை ஆதார் ஆணையம் தகவல்

இந்திய குடிமக்கள் ஒவ்வொருவருக்கும், அவர்களின் தனிப்பட்ட விவரங்கள் அடங்கிய ஆதார் அட்டை வழங்கப்படுகிறது. இதற்கான பணிகளை மத்திய தனித்துவ அடையாள அட்டை ஆணையம் (ஆதார் ஆணையம்) நாடு முழுவதும் மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் ஆதார் அட்டையை லேமினேட் செய்தல், பிளாஸ்டிக் அட்டையாக மாற்றுதல் மற்றும் ஸ்மார்ட் கார்டாக எடுத்து தருவதாக கூறி சில சட்ட விரோத நிறுவனங்கள் பொதுமக்களிடம் இருந்து ரூ.50 முதல் ரூ.200 வரை பெறுவதாக புகார்கள் வருகின்றன. இந்த நிறுவனங்கள் மீது இந்திய தண்டனை சட்டம் மற்றும் ஆதார் சட்டம் போன்றவற்றின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆதார் ஆணையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

ஆதார் அட்டை சாதாரண காகிதத்தில் கருப்பு வெள்ளையில் அச்சிடப்பட்டு இருந்தாலும் அதை அனைத்துவித பயன்பாட்டுக்கும் செலுத்தலாம் என்று கூறியுள்ள இந்த ஆணையம், பிளாஸ்டிக் அல்லது ஸ்மார்ட் ஆதார் அட்டைகள் தேவையில்லை என்றும் கூறியுள்ளது. எனவே இப்படிப்பட்ட கார்டுகளுக்காக சட்டவிரோத நிறுவனங்களிடம் பொதுமக்கள் தங்கள் ஆதார் எண்ணை கொடுக்கவோ, தனிப்பட்ட அடையாளங்களை வழங்கவோ வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.

Tags: News, Lifestyle, Art and Culture

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top