கடும் நெருக்கடியில் ரஷ்ய அதிபர் புடின்!

கடும் நெருக்கடியில் ரஷ்ய அதிபர் புடின்!

உக்ரைன் மீதான போர் காரணமாக பொருளாதார ரீதியாக ரஷ்யா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்ற உண்மையை ஜனாதிபதி விளாடிமிர் புடின் உணர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் உக்ரைன் மீதான போர் நடவடிக்கைகளை நிறுத்தலாம் அல்லது பெயரளவில் முன்னெடுக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் போருக்கு பின்னர் ரஷ்யாவில் 4 மில்லியன் மக்கள் தங்கள் வேலையை இழந்துள்ளனர்.

பல நூறு மில்லிய டொலர் மதிப்பிலான வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது. சுகாதாரத்துறைக்கான செலவுகள் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது, மக்கள் அச்சம் காரணமாக வங்கி சேமிப்புகளை கைப்பற்ற அவசரம் காட்டி வருகின்றனர்.
 
ஆனால், நாட்டு நிலவரம் நன்கு தெரிந்து கொண்டுள்ள ஜனாதிபதி விளாடிமிர் புடின், மொத்தமும் மூடி மறைத்து வருவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. உக்ரைன் போருக்கு பின்னர் மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ள புடின் முன்னெடுத்த நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்றே தெரிய வந்துள்ளது.
 
மேலும், மேற்கத்திய நாடுகளின் நடவடிக்கைகளால், கடந்த மாத இறுதியில் ரஷ்யா 100 ஆண்டுகளில் முதல் முறையாக வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் தவறவிட்டதாக தெரியவந்துள்ளது.
 
மட்டுமின்றி, 1,000க்கும் மேற்பட்ட மேற்கத்திய நிறுவனங்கள் ரஷ்யாவிலிருந்து வெளியேறிய அதே வேளையில், ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் மே மாதம் பெரும்பாலான ரஷ்ய எண்ணெய் இறக்குமதிகளை ஆண்டின் இறுதிக்குள் தடை செய்ய ஒப்புக்கொண்டனர்.
 
மேலும், ரஷ்யாவில் வேலையின்மை 2022 இல் 9.3 சதவீதத்தை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது, இதனால் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 3.8 மில்லியன் மக்கள் வேலைகளை இழக்கும் இக்கட்டான நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்றே தெரிவிக்கப்படுகிறது.
 
மட்டுமின்றி, ரஷ்யாவில் உள்ள 63 சதவீத பிராந்தியங்கள் 2022ல் வேலையின்மையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பை காணும் என எதிர்பார்க்கப்படுகிறது, முக்கிய தொழில்கள் கடுமையாக பாதிக்கப்படும்.
 
அத்துடன், வேலைக்கான உரிய ஆட்கள் இல்லை என்பதால் மென்பொருள் துறையில் 170,000 பணியிடங்கள் காலியாகவே காணப்படுகிறது. மட்டுமின்றி, எண்ணெய் மற்றும் எரிவாயு வருவாயும் கடும் இழப்பை சந்தித்து வருகிறது.
 
பலவீனமடைந்து வரும் பொருளாதாரத்தின் மத்தியில் தனது போர் நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுப்பதற்காக, புடின் ஏற்கனவே பல துறைகளில் அரசாங்க செலவினங்களைக் குறைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் - சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உட்பட.
 
இதற்கிடையில், ரஷ்யா தனது சொந்த பொருளாதாரத்தை மீட்டெடுப்பதைத் தொடர்வதால், அதன் தேசிய கையிருப்பு வீழ்ச்சியடைந்துள்ளன. மேலும், ரஷ்யாவின் மத்திய வங்கியின் கையிருப்பில் பாதி (£300bn) உக்ரைனின் நட்பு நாடுகளால் முடக்கப்பட்டுள்ளது,
 
மட்டுமின்றி அதன் நலிந்த பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கும் ரஷ்யாவால் அணுக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top