ரமலான் மாதத்திலும் கார் குண்டு வெடிப்பு!

ரமலான் மாதத்திலும் கார் குண்டு வெடிப்பு!

ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த கார் வெடிகுண்டு தாக்குதலில் மாணவர்கள் உள்பட 30 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். 70க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் மருத்துவமனை கட்டிடம் மற்றும் மருத்துவமனையில் நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்சுகள் ஆகியவை பலத்த சேதமடைந்தன.

ஆப்கானிஸ்தான் நாட்டின் கிழக்கே அமைந்த லோகர் மாகாணத்தின் தலைநகர் புல் இ ஆலமில் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனைக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த கார் வெடித்து சிதறியது.
 
புனித ரமலான் மாதத்தினை ஒட்டி நேற்று மாலை முஸ்லிம் மக்கள் நோன்பு துறந்த சற்று நேரத்தில் நிகழ்ந்த கார் வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்தில் சிக்கி 30 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். 70 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களில் பலர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை உயர கூடும் என அஞ்சப்படுகிறது. 

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top