சாம்சங் அதன் Samsung Galaxy F23 5G யின் புதிய மாடல் அறிமுகம்!

சாம்சங் அதன் Samsung Galaxy F23 5G யின் புதிய மாடல் அறிமுகம்!

சாம்சங் இந்தியாவில் Galaxy F23 5G ஸ்மார்ட்போனுக்கான புதிய காப்பர் ப்ளஷ் வண்ண விருப்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய மாடல் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்ட இரண்டு வகைகளில் வருகிறது. போனின் விலை ரூ.15,999 முதல் தொடங்குகிறது. சாம்சங் ஐசிஐசிஐ வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடி சலுகைகளை வழங்குகிறது.

அப்போது இந்த ஸ்மார்ட்போன் அக்வா புளூ மற்றும் ஃபாரஸ்ட் கிரீன் என இரண்டு நிறங்களில் மட்டுமே அறிமுகமாகி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி F23 ஸ்மார்ட்போனின் காப்பர் பிளஷ் நிற வேரியண்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது.
 
சாம்சங் கேலக்ஸி F23 5ஜி ஸ்மார்ட்போன் காப்பர் பிளஷ் 4GB+128GB மெமரி மாடல் விலை ரூ. 15 ஆயிரத்து 999 என்றும் 6GB+128GB மெமரி மாடல் விலை ரூ. 16 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்துவோருக்கு ரூ. 1000 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.  
 
சாம்சங் கேலக்ஸி F23 5ஜி ஸ்மார்ட்போன்:-
 
6.6 இன்ச் 2408x1080 பிக்சல் FHD+ LCD இன்பினிட்டி யு டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு 
- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் Snapdragon 750G 8nm பிராசஸர்
- அட்ரினோ 619 GPU
- 4GB / 6GB ரேம்
- 128GB மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 12 மற்றும் சாம்சங் ஓன் யு.ஐ. 4.1
- டூயல் சிம்
- 50MP பிரைமரி, f/1.8 
- 8MP 123° அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, f/2.2 
- 2MP மேக்ரோ கேமரா, f/2.4
- 8MP செல்பி கேமரா, f/2.2
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- சாம்சங் பே
- 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 802.11 ac (2.4GHz + 5GHz), ப்ளூடூத் 5.0
- யு.எஸ்.பி.டைப் சி 
- 5000mAh பேட்டரி
- 25W பாஸ்ட் சார்ஜிங் வசதி
 
புது நிறம் தவிர சாம்சங் கேலக்ஸி F23 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களில் வேறு எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில் இந்த ஸ்மார்ட்போனில் 6.6 இன்ச் 2408x1080 பிக்சல் FHD+LCD இன்பினிட்டி யு டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 750G பிராசஸர் வழங்கப்பட்டு உள்ளது.

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top