புதிய பீப்பர் ஆப் செயலி உருவாக்கம்!

புதிய பீப்பர் ஆப் செயலி உருவாக்கம்!

மக்களின் தேவைகளை எளிமையாக்கும் வகையில் நாளுக்கு நாள் புதுப்புது கண்டுபிடிப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன. ஒரு காலத்தில் மெசேஜ் செய்ய ஒரே ஒரு செயலி இருந்த மட்டும் நிலையில், தற்போது ஏராளமான செயலிகள் உள்ளன. ட்விட்டர், பேஸ்புக், மெசஞ்சர், கூகுள் ஹேங்கவுட்ஸ் உள்ளிட்ட செயலிகளை செல்போன் யூசர்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். ஒவ்வொரு செயலியையும் செல்போனில் ஒவ்வொரு பக்கத்தில் இருப்பதால், அதனை தேடுவதற்கு சிரமப்பட்டு தங்களுக்கு பிடித்த ஒரே ஒரு செயலியை பெருமளவில் பயன்படுத்துகிறார்கள். 

இதனை புரிந்து கொண்ட பெபல் ஸ்மார்ட்வாட்ச் நிறுவனம், Beeper App என்ற புதிய செயலியை உருவாக்கியுள்ளது. 15 மெசேஜ் செயலிகள் இந்த ஒரே செயலியில் கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய பீப்பர் செயலியின் நிறுவனர் எரிக் மிகிகோவ்ஸ்கி, மெசேஜ் செயலிகளின் HUB -ஆக பீப்பர் செயலி இருக்கும் என தெரிவித்துள்ளார். ஒரே செயலியில் டிவிட்டர், பேஸ்புக், மெசஞ்சர், டெலிகிராம், சிக்னல், ஸ்கைப், கூகுள் ஹேங்கவுட்ஸ், ஐ.ஆர்.சி, எஸ்.எம்.எஸ் உள்ளிட்ட 15 செயலிகள் பீப்பர் செயலியில் இருக்கும்.
 
முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த செயலி மற்ற செயலிகளைப்போல் இலவசம் கிடையாது. ஒவ்வொரு மாதம் 10 டாலரை யூசர்கள் கட்டணமாக செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தும் யூசர்களுக்கு மட்டுமே அனைத்து செயலிகளையும் ஒரே இடத்தில், அதாவது பீப்பர் செயலியில் கிடைக்கும். ஆன்ட்ராய்டு, லினக்ஸ், விண்டோஸ் ஆகியவற்றிலும் பீப்பர் செயலியை பயன்படுத்தலாம் என நிறுவனர் மிகிகோவ்ஸ்கி தெரிவித்துள்ளார். 

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top