நாசாவின் புதிய சாதனை!

நாசாவின் புதிய சாதனை!

செவ்வாய் கிரகத்தில் ஆக்சிஜன் இல்லை, 96 சதவிகிதம் கார்பன் டை ஆக்சைடுதான் இருக்கிறது. எனவே இதுபோன்ற கிரகத்திற்கு மனிதர்கள் சென்றால் ஆக்சிஜனை உருவாக்கி சுவாசிக்க முடியுமா என்று கேள்வி எழும்? தற்சமயம் இதற்கு ஒரு பதிலை நாசா அமைப்பு கொடுத்துள்ளது,

அதன்படி மனிதர்களை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பி ஆராய்சி செய்யவைக்க முடியுமா என்பதை அறிந்துகொள்ள நாசா அமைப்பு Perseverance எனும் ரோவரை கடந்த பிப்ரவரி மாதம் செவ்வாய் கிரகத்தில் தரையிறக்கியது.
 
செவ்வாய் கிரகத்தில் இறங்கிய ரோவர் ஆனது துல்லியமான புகைப்படங்கள் மற்றும் தவல்களை நாசா அமைப்பிற்கு அனுப்பி வருகிறது. மேலும் 6 சக்கரங்கள் கொண்ட இந்த ரோபோட்டிக் ரோவர் ஆனது தற்சமயம் செவ்வாய் வளிமண்டலத்தில் இருந்து கார்பன் டை ஆக்சைடை எடுத்து ஆக்சிஜனாக மாற்றி இருக்கிறது. குறிப்பாக கார்பன் டை ஆக்சைடை ஆக்சிஜனாக மாற்ற MOXIE என பெயரிடப்பட்ட கருவியை ரோவருடன் இணைத்து அனுப்பியுள்ளது நாசா அமைப்பு.
 
அதாவது இந்த கருவி ஆனது காரபன் டை ஆக்சைடு மூலக்கூறுகளை பிரிந்து ஆக்சிஜனை உருவாக்கும் அருமையான திறன் கொண்டது. நாசா அமைப்பு வெளியிட்ட தகவலின்படி, இந்த முதல்கட்ட சோதனையில் 5 கிராம் ஆக்சிஜனை கருவி உற்பத்தி செய்துள்ளது என்றும், இதன் மூலம் ஒரு விண்வெளி வீரர் சுமார் 10 நிமிடங்கள் வரை சுவாசிக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top