இந்தியாவில் அறிமுகமானது Apple MacBook Air, MacBook Pro!

இந்தியாவில் அறிமுகமானது Apple MacBook Air, MacBook Pro!

உலகளாவிய டெவலப்பர் மாநாட்டின் (WWDC 2022) முதல் நாளில் ஆப்பிள் பல தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இவை வன்பொருள் முதல் மென்பொருள் வரை இருக்கும். ஆப்பிள் iOS 16 உடன் iPadOS, macOS மற்றும் watchOS ஆகியவற்றின் புதிய பதிப்புகளை அறிமுகப்படுத்தியது. இந்த நிகழ்வின் மிக முக்கியமான வெளியீடு 13-இன்ச் மேக்புக் ஏர் மற்றும் மேக்புக் ப்ரோஸ் மற்றும் எம்2 சிப்செட் வெளியீடு ஆகும். மேக்புக் ப்ரோவை 2020 எடிசனாக வழங்கும் அதே வேளையில், ஆப்பிள் மேக்புக் ஏரையும் மறுவடிவமைப்பு செய்துள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.

மேக்புக் ஏர் M2 யின்  256 ஜிபி ஸ்டோரேஜ்  வேரியண்ட் ஆப்பிள் ஆன்லைன் ஸ்டோரில் ரூ.1,19,900க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. ஸ்டோரேஜிர்க்கான பிற விருப்பங்களும் கிடைக்கும். MacBook Pro M2 இன் ஆரம்ப விலை ரூ.1,29,900 அதாவது 256 GB ஸ்டோரேஜ் கொண்ட மாடல் இந்த விலையில் கிடைக்கும்.
 
M2 சிப்செட் கொண்டு அறிமுகம் செய்யப்பட்ட முதல் மாடலாக 2022 மேக்புக் ஏர் இருக்கிறது. முந்தைய மாடலுடன் ஒப்பிடுகையில், 2022 மேக்புக் ஏர் மாடல் முற்றிலும் புது டிசைன் கொண்டு இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது. இது மிக மெல்லியதாகவும், குறைந்த எடையுடையதாகவும் இருக்கிறது. இது மாடல் மேக்சேஃப் சார்ஜிங் போர்ட் உடன் வருகிறது. 2022 மேக்புக் ஏர் மாடல், ஸ்பேஸ் கிரே, லேப்டாப் சில்வர், மிட்நைட் மற்றும் ஸ்டார்லைட் என நான்கு விதமான நிறங்களில் கிடைக்கிறது.
 
இது 13.6 இன்ச் லிக்விட் ரெட்டினா டிஸ்ப்ளே உடன் வருகிறது. முந்தைய மாடலை விட 20சதவீதம் அதிக பிரைட்னஸ் கொண்டுள்ளது. 4 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், ஸ்பேஷியல் ஆடியோ சப்போர்ட், ஸ்டீரியோ ஆடியோ, 1080P ஃபேஸ்டைம் HD கேமரா, போர்ஸ் டச் டிராக்பேட், நாள் முழுக்க பேட்டரி பேக்கப், 18 மணி நேர வீடியோ பிளேபேக், 30 வாட் யு.எஸ்.பி. சி அடாப்டர் உள்பட் பல்வேறு சிறப்பம்சங்களை 2022 மேக்புக் ஏர் மாடல் கொண்டுள்ளது.
 
அதேபோல் 2022 மேக்புக் ப்ரோ மாடல், 13 இன்ச் லிக்விட் ரெட்டினா டிஸ்ப்ளே, 8GB யுனிஃபைடு மெமரி, 8 கோர் CPU, 10 கோர் GPU, புதிய M2 சிப்செட், 256ஜிபி / 512ஜிபி SSD ஸ்டோரேஜ், மேஜிக் கீபோர்டு, ஃபோர்ஸ் டச் டிராப்பேட், டச் பார் மற்றும் டச் ஐடி, 2 தண்டர்போல்ட் / 4 USB போர்ட்கள், 20 மணி நேரத்திற்கான பேட்டரி பேக்கப் உள்ளிட்ட சிறப்பம்சங்களுடன் வருகிறது.
 
இது மட்டுமின்றி ஆப்பிள் நிறுவனம் புதிய மேக்புக் ஏர் மற்றும் 13 இன்ச் மேக்புக் ப்ரோ ஆகிய மாடல்களையும் அறிமுகம் செய்துள்ளது. எதிர்பார்த்தப்படியே புது மேக்புக் ஏர் மற்றும் 13 இன்ச் மேக்புக் ப்ரோ மாடல்களில் முற்றிலும் புதிய சக்திவாய்ந்த M2 சிப்செட் இடம்பெற்றுள்ளது.

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top