ஜெப்ரானிக்ஸ் யின் அசத்தலான புரோஜெக்டர் அறிமுகம்!

ஜெப்ரானிக்ஸ் யின் அசத்தலான புரோஜெக்டர் அறிமுகம்!

இந்தியாவின் முன்னணி நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் பிராண்டு ஜெப்ரானிக்ஸ், ZEB-PixaPlay 11 எனும் பெயரில் புதிய புரொஜெக்டர்-ஐ அறிமுகம் செய்து இருக்கிறது. இது பயனருக்கு திரையரங்கு போன்ற பெரிய திரை அனுபவத்தை வீட்டிலேயே வழங்குகிறது.

நீண்ட பணிநாட்கள், மனஅழுத்தம் மிகுந்த மீட்டிங் மற்றும் தினசரி வேலைகள் முடிந்தவுடன், விருப்பப்படி உங்களுக்கு பிடித்த திரைப்படத்தைப் பார்த்து, ஓய்வெடுக்கலாம், அடுத்த ஒரு வார பணிகளுக்கு உங்களை உற்சாகப்படுத்திக் கொள்ள இது உதவும்.
 
புதிய புரொஜெக்டர் கொண்டு 381cms அளவுள்ள பெரிய திரையில் நீங்கள் பார்க்கும் அனுபவத்தை உயர்த்தும் பிரமிக்க வைக்கும் காட்சிகளுடன் மகத்தான அனுபவத்தைப் பெற முடியும். தெளிவான காட்சிகள் மற்றும் உள்ளமைக்கப்பட்ட ஸ்பீக்கர் மூலம் உங்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படங்கள், தொடர்கள், ஆன்லைன் கற்றல் வகுப்புகள், கேம்கள் மற்றும் பலவற்றை பார்க்கலாம். 
 
அதன் கையடக்கமான மற்றும் இலகுரக வடிவமைப்பு அதை எடுத்துச் செல்லவும் சவுகரியமான சாதனமாக மாற்றுகிறது. அத்துடன் இதற்கு ரிமோட் கண்ட்ரோலும் உள்ளது. புரொஜெக்டரில் 720p HD நேட்டிவ் ரெசல்யூஷன் மற்றும் 1080p FHD ஆதரவும் உள்ளது. எனவே நீங்கள் அசத்தலான காட்சிகள், கூரான, மிகத் தெளிவான படங்கள் மற்றும் வீடியோக்களை பார்த்து உங்கள் பொழுதுபோக்கு அனுபவத்தை புதிய நிலைக்கு கொண்டு செல்லலாம்.  
 
LED ப்ரொஜெக்டரில் MicroSD, AV-இன்/AUX அவுட், USB, HDMI போன்ற பல கனெக்டிவிட்டிக்கள் உள்ளன. மீடியா பிளேபேக்கில் USB பென் டிரைவ் மற்றும் மைக்ரோ SD கார்டு வசதி உள்ளது. வீடியோ உள்ளீடு HDMI மூலம் கொடுக்கப்பட முடியும்.
 
நீங்கள் பார்க்கும் காட்சிகளில் சிறந்த ஒலியை வழங்கும் வகையில் புரொஜெக்டரில் இன்பில்ட் ஸ்பீக்கர் இருப்பதால், காட்சிகளுடன் ஆடியோ அனுபவத்தையும் பெற்று மகிழலாம். முழுமையான ஹோம் தியேட்டர் அனுபவத்திற்கு, Zebronics-ன் பரந்த அளவிலான இணக்கமான மாடல்களில் இருந்து ஸ்பீக்கரை கூடுதலாக வாங்கிக் கொள்ளலாம்.
 
பவர் பேங்க்குடன் இணக்கமாக இருப்பதால் விற்பனைக்கு கிடைக்கும் மற்ற புரொஜெக்டர்களில் இருந்து இது தனித்து நிற்கிறது. உங்கள் பொழுதுபோக்கை நீங்கள் எங்கும் எடுத்துச் சென்று பவர் பேங்க் மூலம் இயக்கலாம், இருப்பினும் இது மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் மற்றும் எல்லா வகையிலும் மக்களுக்கு பிரீமியம் அனுபவத்தை அளிக்கும். 
 
இந்தியாவில் ஜெப்ரானிக்ஸ் ZEB-PixaPlay 11 புரொஜெக்டர் அமேசான் வலைதளத்தில் ரூ. 6 ஆயிரத்து 299 விலையில் கிடைக்கிறது.

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top