சுரேஷ் ரெய்னாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம்!

சுரேஷ் ரெய்னாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம்!

இயக்குநர் ஷங்கர், கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா உள்ளிட்டோருக்கு வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியவர். தமிழ்நாட்டில் தோனிக்கு எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்களோ அதே அளவு ரசிகர்கள் ரெய்னாவுக்கும் இருக்கிறார்கள். மேலும் அவரை சின்ன தல என்றும் ரசிகர்கள் அழைப்பது வழக்கம். இந்தச் சூழலில் அவருக்கு வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் ஆண்டுதோறும் துறை ரீதியா சாதனை படைத்தவர்களுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்படுவது வழக்கம். அந்தவகையில் இன்று ரெய்னா, இயக்குநர் ஷங்கர், ராடிசன் ப்ளூ குழும தலைவர் விக்ரம் அகர்வால் ஆகியோருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
 
இந்தப் பட்டத்தை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் வேல்ஸ் குழுமத் தலைவர் ஐசரி கணேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 
டாக்டர் பட்டம் பெற்றது குறித்து சுரேஷ் ரெய்னா தனது ட்விட்டர் பக்கத்தில், “வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் இந்த டாக்டர் பட்டத்தை பெறுவதை சிறந்ததாக கருதுகிறேன். சென்னை எப்போதுமே எனக்கு ஸ்பெஷலான இடம். என் இதயத்தின் ஆழத்திலிருந்து அனைவருக்கும் அன்பும், நன்றியும் தெரிவித்துக்கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

Tags: News, Hero

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top