சேப்பாக் சூப்பர் கில்லீசை வீழ்த்தியது தூத்துக்குடி அணி!

சேப்பாக் சூப்பர் கில்லீசை வீழ்த்தியது தூத்துக்குடி அணி!

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் சேப்பாக் சூப்பர் கில்லீசை வீழ்த்தி தூத்துக்குடி அணி நான்காவது வெற்றியைப் பெற்றுள்ளது. தமிழக அளவிலான 8 அணிகள் பங்கேற்றுள்ள 2-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட் தொடர் சென்னை, நெல்லை, திண்டுக்கல் மாவட்டத்தின் நத்தம் ஆகிய இடங்களில் நடந்து வருகிறது. ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும் என்ற விதிப்படி லீக் முடிவில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்குத் தகுதி பெறும். இந்த நிலையில் நேற்றிரவு நெல்லையில் நடந்த 12-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் தூத்துக்குடி பேட்ரியாட்சும், சேப்பாக் சூப்பர் கில்லீசும் பல பரீட்சை நடத்தின.

முதல் 3 ஆட்டங்களில் ஓய்வு எடுத்த தூத்துக்குடி கேப்டன் தினேஷ் கார்த்திக், அணிக்கு திரும்பினார். டாஸ் ஜெயித்த தூத்துக்குடி கேப்டன் தினேஷ் கார்த்திக் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவிப்பு கொடுத்தார். இதனையடுத்து தூத்துக்குடி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கவுசிக் காந்தியும், வாஷிங்டன் சுந்தரும் மட்டை வீசத் தொடங்கினர். சரியான பார்மில் உள்ள இவர்கள் இந்த ஆட்டத்திலும் தங்களின் அதிரடியைக் காட்டி மிரட்டினர்.

குறிப்பாக வாஷிங்டன் சுந்தர் யோமகேஷின் ஒரே ஓவரில் 4 பவுண்டரிகளை விரட்டியடித்தார். அவ்வப்போது சிக்சரும் பறக்க விட்டார். இதனால் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. 11.1 ஓவர்களில் அந்த அணி விக்கெட் இழப்பின்றி 100 ரன்களை தொட்டது. நடப்பு தொடரில் இந்தக் கூட்டணி 3-வது முறையாக 100 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. அணியின் ஸ்கோர் 107 ரன்களை எட்டிய போது அலெக்சாண்டரின் பந்து வீச்சில் கவுசிக் காந்தி 35 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து வந்த தினேஷ்கார்த்திக் அதே ஓவரில் கிளீன் போல்டு ஆனார். 3-வது விக்கெட்டுக்கு ஆட வந்த ஆனந்த் 13 ரன்னில் வெளியேறினார்.

கடைசி ஓவரை வீசிய அந்தோணி தாசின் பந்துவீச்சில் ஆகாஷ் சும்ரா 2 சிக்சரும், ஒரு பவுண்டரியும் விளாசினார். அடுத்த பந்தில் வாஷிங்டன் சுந்தர் ரன்-அவுட் ஆனார். 20 ஓவர் முடிவில் தூத்துக்குடி அணி 4 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் குவித்தது. இதன் பின்னர் கடின இலக்கை நோக்கி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கோபிநாத்தும், கேப்டன் சதீசும் அடியெடுத்து வைத்தனர். தூத்துக்குடி பவுலர்கள் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து, கில்லீஸ் அணியை இலக்கை நெருங்க விடாமல் கட்டுப்படுத்தினர். 20 ஓவர்களில் சேப்பாக் சூப்பர் கில்லீசால் 8 விக்கெட்டுக்கு 151 ரன்களே எடுத்து தோல்வியைத் தழுவியது.

Tags: News, Lifestyle

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top