மைதானத்தில் ஒரு வீரரை மட்டும் புறக்கணித்த இங்கிலாந்து அணி

மைதானத்தில் ஒரு வீரரை மட்டும் புறக்கணித்த இங்கிலாந்து அணி

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியில் மார்க் வுட் மட்டும் மைதானத்தில் ஒதுக்கப்பட்ட சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இங்கிலாந்து அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது.
 
நேற்று தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி சற்று சொதப்பலான பேட்டிங்கை வெளிப்படுத்தியது.
 
இங்கிலாந்து அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் லீஸ் (4), ஜாக் கிரௌலி (8) , கேப்டன் ஜோ ரூட் 13, லாரன்ஸ் (20) என அடுத்தடுத்து சொதப்பியதால் பின்னடைவாக சென்றது. இதன் பின்னர் வந்த ஜானி பேர்ஸ்டோ 140 ரன்களும், ஃபோக்ஸ் 42 ரன்களும் எடுக்க முதல் இன்னிங்ஸில் 311 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
 
இதனைத் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 202/4 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது. போனர் (34), ஜேசன் ஹோல்டர் (43) ஆகியோர் சேர்க்க 2வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. முதல் இன்னிங்ஸில் எந்த அணிக்கு சாதகமாக முடியும் என்பதில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
 
இந்நிலையில் 2ம் நாள் ஆட்டத்தின் போது சுவாரஸ்ய சம்பவம் ஒன்று நடந்தது. ரன்கள் அதிகமாக சென்றதால் களத்தில் இருந்த கேப்டன் ஜோ ரூட், அணி வீரர்கள் அனைவரையும் ஆலோசனைக்கு அழைத்தார். அப்போது ஜோ ரூட் தவிர்த்து 9 வீரர்கள் மட்டுமே கூடி நின்று ஆலோசனை நடத்தினர். வேகப்பந்துவீச்சாளர் மார்க் வுட் மைதானத்தின் ஓரமாக தனியாக நின்றுக்கொண்டிருந்தார்.
 
ஜோ ரூட் அழைத்ததை மார்க் வுட் கவனிக்கவில்லை. இது ரூட்டிற்கும் தெரிந்தது. இருப்பினும், நேரம் குறைவாக இருந்ததால், அதுகுறித்து கண்டுகொள்ளாமல் ரூட் ஆலோசனை செய்து வந்தார். இதனை புரிந்துக்கொண்ட மார்க் வுட்டும், ஆலோசனையில் பங்கேற்றதை போல், நின்ற இடத்திலேயே சைகை செய்தார். இதனைக் கண்ட ரசிகர்கள், வர்ணனையாளர்கள் சிரித்து மகிழ்ந்தார்கள். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Tags: News, Hero

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top