வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் ஓய்வு அறிவிப்பு

வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் ஓய்வு அறிவிப்பு

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் முதல் தர கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

கேரளாவை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் 2005-ம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமானார். இந்தியாவுக்காக 27 டெஸ்ட், 53 ஒருநாள் மற்றும் 10 டி20 போட்டிகளில் விளையாடினார். அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 87 விக்கெட்டுகளை எடுத்தார். மேலும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் முறையே 75 மற்றும் 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
 
கடந்த 2013 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய ஸ்ரீசாந்த் ஸ்பாட் பிக்ஸிங் முறைகேட்டில் ஈடுபட்டதாகக்க கூறி கைது செய்யப்பட்டார். அவருடன் அங்கீத் சவான், அஜித் சண்டிலா ஆகியோரும் இதில் ஈடுபட்டது தெரிய வந்தது. , இவர்கள் மூவருக்கும் வாழ்நாள் தடை விதித்து பிசிசிஐ ஒழுங்கு முறைக்குழு உத்தரவிட்டது.
 
பிசிசிஐ-ன் இந்த முடிவை எதிர்த்து ஸ்ரீசாந்த் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ஸ்ரீசாந்த் மீதான வாழ்நாள் தடையை நீக்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து ரஞ்சி டிராபி, விஜய் ஹசாரே உள்ளிட்ட உள்நாட்டு தொடர்களில் விளையாடி வந்தார். மேலும் தற்போது நடைபெற்ற ஐபிஎல் ஏலத்திலும் ஸ்ரீசாந்த் தனது பெயரை பதிவு செய்தார். ஆனால் எந்த அணியும் அவரை ஏலத்தில் எடுக்க முன்வரவில்லை.
 
இதனிடையே, தற்போது முதல் தர கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்துள்ளார் ஸ்ரீசாந்த். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், " எனது குடும்பம், எனது அணியினர் மற்றும் இந்திய மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவது பெருமையாக உள்ளது. மிகுந்த சோகத்துடன் கனத்த இதயத்துடன் இதைச் சொல்கிறேன். உள்ளூர் கிரிக்கெட்டில் இருந்து நான் ஓய்வு பெறுகிறேன். அடுத்த தலைமுறை வீரர்களுக்காக, எனது முதல் தர கிரிக்கெட் வாழ்க்கையை இத்தோடு முடித்துக் கொள்ள முடிவு செய்துள்ளேன். இது எனக்கு ஒரு கடினமான நாள் என்பதை நான் உணர்கிறேன்.
 
இந்த முடிவு என்னுடைய தனிப்பட்ட முடிவு. இது எனக்கு மகிழ்ச்சியைத் தராது என்று எனக்குத் தெரிந்தாலும், என் வாழ்க்கையின் இந்த நேரத்தில் எடுப்பது சரியான மற்றும் மரியாதைக்குரிய நடவடிக்கையாக நினைக்கிறேன். டொமஸ்டிக் கிரிக்கெட்டில் இருந்த ஒவ்வொரு தருணத்தையும் நான் நேசித்தேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags: News, Hero, Lifestyle

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top