வீடியோக்களை உள்ளூர் மொழியில் தேடும்வசதி வருகிறது!

வீடியோக்களை உள்ளூர் மொழியில் தேடும்வசதி வருகிறது!

பிரபலமான வீடியோக்களை யூசர்கள் தங்களது உள்ளூர் மொழியில் தேட அனுமதிக்கும் புதிய மொழிபெயர்ப்பு அம்சத்தை யூடியூப் சோதிக்கிறது. சமீபத்தில் யூடியூப் தனது கன்டென்ட் கிரியேட்டர்ஸ் தங்கள் கூகுள் அக்கவுண்ட்டில் விவரங்களை மாற்றாமல் யூடியூப் ஸ்டுடியோ மூலம் தங்கள் பெயர்களையும் சுயவிவரப் படங்களையும் (profile pictures) மாற்ற அனுமதிக்கத் தொடங்கியது. இந்நிலையில் வீடியோ தலைப்புகள், டிஸ்கிரிப்ஷன்ஸ், கேப்ஷன்கள் மற்றும் பலவற்றை நம்முடைய சொந்த மொழியில் தானாக மொழிபெயர்க்கும் புதிய அம்சத்தை சோதிக்கும் முயற்சியில் யூடியூப் உள்ளது. இந்த அம்சம் தற்போது ஆங்கிலத்திலிருந்து போர்த்துகீசிய மொழியில் மொழி பெயர்க்குமாறு செய்யப்பட்டு தற்போது வெப் மற்றும் மொபைல் appகளில் செயல்படுகிறது.

இது பாப் அப் ஆக கிடைக்கிறது, அதை டேப் செய்தால் தானாகவே போர்த்துகீசிய மொழியில் உரையை மொழி பெயர்க்கிறது. வீடியோ டைட்டிலுக்கு அடுத்ததாக இந்த மொழிபெயர்ப்பு பாப்-அப் தோன்றும். விரைவில் யூடியூப் இன்னும் அதிக மொழிகளுக்கான சபோர்ட்டை சேர்க்கக் கூடும் என தெரிகிறது. இந்த புதிய அம்சம் பிரபலமான படைப்பாளர்களிடமிருந்து கூட மொழிபெயர்க்கப்பட்ட வீடியோ தலைப்புகளுடன் கூடிய முடிவுகளை காட்டுகிறது. வீடியோ டைட்டில் மற்றும் டிஸ்கிரிப்ஷன்ஸ், வியூ கவுன்ட், சப்ஸ்கிரைபர் எண்ணிக்கை மற்றும் பட்டன் டெக்ஸ்ட் கூட இந்த அம்சத்தின் மூலம் ட்ரான்ஸிலேட் செய்யப்பட்டுள்ளன.
 
சில யூசர்கள் யூடியூப்பின் டெஸ்க்டாப் மற்றும் மொபைல் பதிப்புகள் டைட்டில்களை தானாக மொழிபெயர்ப்பதற்கான விருப்பங்களைக் காட்ட தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர். யூசர்களால் ஸ்பாட் செய்யபட்ட வீடியோக்கள் தானாக மொழிபெயர்க்கப்பட்ட டைட்டில்கள், டிஸ்கிரிப்ஷன்கள் மற்றும் குளோஸ்டு கேப்ஷன்கள் ஆகியவற்றைக் காண்பிப்பதாக கூறப்படுகிறது. இதன் சரியான செயல்பாடு பற்றி தெளிவாக இல்லை என்ற போதும் முழுமையான அப்டேட்டிற்கு பிறகு யூசர்கள் தங்கள் உள்ளூர் மொழியில் வீடியோக்களைத் தேட முடியும் என தெரிகிறது.

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top