நான் தலைகீழாகத்தான் சொல்லுவேன்...- சச்சின்!

நான் தலைகீழாகத்தான் சொல்லுவேன்...- சச்சின்!

இன்று இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் சேவாக்கின் பிறந்த நாள் ஆகும். இன்றோடு அவருக்கு 39 வயது ஆகிறது. அவர் தனது பிறந்தநாளை டெல்லியில் கொண்டாடி வருகிறார். இன்று அவரது பிறந்த நாள் என்பதால் கிரிக்கெட் வீரர்களும் , பிரபலங்களும், ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இன்று முழுக்க அவர் டிவிட்டர் வாழ்த்து மழையால் நனைந்து வருகிறார். இதையடுத்து இந்திய அணியின் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் , சேவாக்கிற்கு வித்தியாசமான முறையில் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். சச்சின் டெண்டுல்கரின் இந்த வித்தியாசமான வாழ்த்து டிவிட்டர் முழுக்க வைரல் ஆகியுள்ளது.

இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரும், பல அதிரடிக்கு சொந்தக் காரருமான வீரேந்திர சேவாக்கிற்கு இன்று பிறந்த நாள் ஆகும். 1978ல் டெல்லியில் ஒரு சிறிய பகுதியில் இவர் பிறந்தார். இந்திய கிரிக்கெட் அணியில் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கி பல சாதனைகள் இவர் படைத்து இருக்கிறார். டிவிட்டரில் மிகவும் சிறப்பாக இயங்கி வரும் இவருக்கு இன்று பிறந்த நாள் என்பதால் மொத்த டிவிட்டர் உலகமே இவரை வாழ்த்திக் கொண்டு இருக்கிறது. சேவாக் பொதுவாக டிவிட்டரில் வித்தியாசமாக பேசுவார் என்பதால் அவருக்கு வரும் வாழ்த்து டிவிட்டுகளும் மிகவும் வித்தியாசமாக இருக்கிறது.

அனைவரும் ஓர் அளவுக்கு வித்தியாசமாக வளைத்து கூறியிருந்தாலும் சச்சின் குறித்துதான் மிகவும் வித்தியாசமான வாழ்த்து ஆகும். இதில் வாழ்த்து தெரிவிக்க வந்த சச்சின் "நான் தலைகீழாகத்தான்  குதிக்கப் போகிறேன்'' என்பது போல "நான் தலைகீழாகத்தான் வாழ்த்து சொல்வேன்" என் வாழ்த்தியிருக்கிறார். மேலும் "எப்போது நான் என்ன சொல்கிறேனோ அதை அப்படியே தலைகீழாக செய்யும் சேவாக்கிற்கு வேறு எப்படி வாழ்த்து கூறுவது" என அந்த டிவிட்டில் எழுதி இருக்கிறார்.

Tags: News, Hero, Star

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top