இன்டர்நேஷனல் டி20 லீக் 2023 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி!

இன்டர்நேஷனல் டி20 லீக் 2023 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி!

துபாயில் தொடங்கப்பட உள்ள இன்டர்நேஷனல் டி20 லீக் 2023 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி இடம்பெற்றுள்ளது.

ஐபிஎல், BIG BASH போன்ற 20 ஓவர் கிரிக்கெட் தொடர்களின் மோகம் சமீப காலமாக தலை தூக்கியுள்ள நிலையில், ஐக்கிய அரபு அமீரகம் ஒரு புதிய தொடரை அறிமுகப்படுத்தியுள்ளது. 2023 ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட உள்ள இந்த 20 ஓவர் கிரிக்கெட் தொடருக்கு, ஐபிஎல் போலவே 8 முதல் 10 அணிகள் ஒவ்வொரு தனியார் நிறுவனத்தின் மூலம் உரிமம் பெறப்பட்டு விளையாட உள்ளனர். அதனடிப்படையில் இந்தியாவின் முதன்மை நிறுவனங்களில் ஒன்றாக இருக்கக்கூடிய ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஐக்கிய அமீரகம் அறிமுகப்படுத்தியுள்ள இன்டர்நேஷனல் டி20 லீக் தொடரில் ஒரு அணிக்கான உரிமத்தைப் பெற்றுள்ளது.
 
அந்த அணிக்கு “MI எமிரேட்ஸ்” என பெயர் சூட்டி உள்ளது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமம். வரும் 2023 ஆம் வருடம் ஜனவரி மாதம் இன்டர்நேஷனல் டி 20 லீகின் முதலாவது தொடர் தொடங்கப்பட உள்ளது. இந்நிலையில் அத்தொடருக்கான அணியினை அறிவித்துள்ளது MI எமிரேட்ஸ் அணி. ஐபிஎல் தொடர் போலவே, உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து விளையாட்டு வீரர்கள் இதில் ஏலம் எடுக்கப்பட்டு, MI எமிரேட்ஸ் அணிக்காக விளையாட உள்ளனர்.
 
அதன்படி, மேற்கிந்திய தீவுகள் அணியில் இருந்து கிரன் பொலார்ட், நிக்கோலஸ் பூரான், டிவெயின் பிராவோ, ஆண்ட்ரே பிளெட்சர், இங்கிலாந்து அணியில் இருந்து சமித் படேல், ஜோர்டான் தாம்சன், வில் ஸ்மீத், நியூசிலாந்து அணியில் இருந்து ட்ரெண்ட் போல்ட், தென் ஆப்ரிக்கா அணியின் இம்ரான் தாகிர், ஆப்கானிஸ்தான் அணியில் இருந்து, நஜிபுல்லா ஜார்டன், ஜாஹிர் கான், பாசல்ஹாக் பரூகி, நெதர்லாந்து அணியின் பாஸ் டி லீட் மற்றும் ஸ்காட்லாந்து அணியின் பிராட்லி வீல் என 14 பேர் கொண்ட குழு அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த 14 பேர் கொண்ட MI எமிரேட்ஸ் அணியினை, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குடும்பத்தின் தலைவர் ஆகாஷ் M அம்பானி வெளியிட்ட பின்பு, இது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும், கிரண் பொலார்டு, ட்ரெண்ட் போல்ட், நிக்கோலஸ் பூரான் போன்ற வீரர்கள் இதில் பங்கு வகிப்பது கூடுதல் பலமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top