லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் ஜெர்சி வெளியீடு..!

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் ஜெர்சி வெளியீடு..!

ஐபிஎல் 15வது சீசன் வரும் 26ம் தேதி தொடங்குகிறது. இந்த சீசனில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய 2 அணிகளும் புதிதாக களமிறங்குகின்றன. 10 அணிகள் ஆடுவதால் இந்த சீசன் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். 

ஐபிஎல் 15வது சீசனுக்கான ஏலத்தில் ஒவ்வொரு அணிக்கும் வீரர்களை வாங்க ரூ.90 கோடி ஒதுக்கப்பட்டது. அதில் ஒரு ரூபாயைக்கூட வீணடிக்காமல், மொத்த தொகையையும் துல்லியமாக செலவு செய்து வீரர்களை ஏலத்தில் எடுத்த ஒரே அணி லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி தான்.
 
ஐபிஎல் கோப்பையை 2 முறை கேகேஆருக்கு வென்று கொடுத்த முன்னாள் கேப்டன் கௌதம் கம்பீர் தான் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் ஆலோசகராக செயல்படுகிறார். ஐபிஎல் மெகா ஏலத்தில் லக்னோ அணி சார்பில் கம்பீர் கலந்துகொண்டார். ஐபிஎல்லில் கோப்பையை வெல்லும் வித்தையை அறிந்த கௌதம் கம்பீர், ஏலத்தில் மிகச்சிறப்பாக அந்த அணியை வழிநடத்தினார்.
 
ஏலத்திற்கு முன்பாகவே கேஎல் ராகுல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ரவி பிஷ்னோய் ஆகிய மூன்று வீரர்களை வாங்கி, கேஎல் ராகுலை கேப்டனாக நியமித்தது லக்னோ அணி. 
 
ஏலத்தில் மிகவும் கவனமாக செயல்பட்ட லக்னோ அணி,  ராகுலுடன் தொடக்க வீரராக இறங்க, தென்னாப்பிரிக்க விக்கெட் கீப்பர் - டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான குயிண்டன் டி காக்கை ரூ.6.75 கோடிக்கு லக்னோ அணி எடுத்தது. டி காக்கை மட்டுமல்லாது, மற்றொரு ஓபனிங் ஆப்சனாக வெஸ்ட் இண்டீஸின் அதிரடி பேட்ஸ்மேன் எவின் லூயிஸை ரூ.2 கோடிக்கு எடுத்தது. 
 
மிடில் ஆர்டர் பேட்டிங் ஆப்சனாக மனீஷ் பாண்டே மற்றும் தீபக் ஹூடா ஆகிய இருவரையும் எடுத்தது. ஏலத்திற்கு முன்பாகவே ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டோய்னிஸை அணியில் எடுத்துவிட்ட லக்னோ அணி, ஏலத்திலும் ஆல்ரவுண்டர்கள் மீது ஆர்வம் காட்டியது. சமகாலத்தின் சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவரும் மேட்ச் வின்னருமான ஜேசன் ஹோல்டர், ஸ்பின் ஆல்ரவுண்டர்களான க்ருணல் பாண்டியா மற்றும் கிருஷ்ணப்பா கௌதம் ஆகிய இருவரையும் லக்னோ அணி எடுத்தது. 
 
ஃபாஸ்ட் பவுலர்கள் தேர்விலும் மிகக்கவனமாக செயல்பட்ட லக்னோ அணி, ஃபாஸ்ட் பவுலர்களாக இந்தியாவின் ஆவேஷ் கான், மார்க் உட் , அங்கித் ராஜ்புத் ஆகியோரை எடுத்த லக்னோ அணி, ஷபாஸ் நதீம், மனன் வோரா, கரன் ஷர்மா, ஆயுஷ் பதானி உள்ளிட்ட அன்கேப்டு வீரர்கள் சிலரையும் அணியில் எடுத்தது. இவர்களில் மார்க் உட் காயம் காரணமாக ஐபிஎல்லில் இருந்து விலகிவிட்டார்.
 
இப்படியாக, கம்பீரின் வழிகாட்டுதலில் கேஎல் ராகுல் கேப்டன்சியில் வலுவான அணியை கட்டமைத்துள்ள லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி இந்த சீசனை மிகுந்த எதிர்பார்ப்புடன் எதிர்நோக்கியுள்ளது.
 
இந்நிலையில், அந்த அணி ஜெர்சியை வெளியிட்டுள்ளது. நீல நிற ஜெர்சியில் மெயின் ஸ்பான்சர் My 11 Circle. ஐபிஎல் இன்னும் 3 நாளில் தொடங்கவுள்ள நிலையில், ஜெர்சி கிட்டை வெளியிட்டுள்ளது லக்னோ அணி.

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top