ஐசிசி 2022 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி!

ஐசிசி 2022 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி!

ஐசிசி டி20 உலகக் கோப்பை இந்தியாவிற்கு 2013க்கு பிறகு கிடைக்கவில்லை.  கடைசியாக தோனி தலைமையில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்ற பிறகு வேறு எந்த ஐசிசி கோப்பையையும் இந்திய அணி வெல்லவில்லை.  அதன் பிறகு இந்திய அணி இரண்டு முறை ஐசிசி பட்டத்தை வெல்வதற்கு அருகில் வந்தும் வெல்லமுடியவில்லை.  ஐசிசி 2017 சாம்பியன்ஸ் டிராபியின் இறுதிப் போட்டியிலும், ஐசிசி உலகக் கோப்பை 2019-ன் அரையிறுதியிலும் தோல்வியை சந்தித்தது.  2021 உலக கோப்பை டி20 போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்திடம் தோல்வியடைந்து போட்டியிலிருந்து வெளியேறினர். 

கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு கேப்டன் பதவியில் இருந்து விலக முடிவு செய்த விராட் கோலியிடம் இருந்து ரோஹித் சர்மா இந்த முறை இந்திய அணியை வழிநடத்துவார். இப்போது இந்தியாவின் அனைத்து வடிவ கேப்டனாக உள்ளார் ரோஹித் சர்மா. 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கான இந்தியாவின் உத்ததேச 15 பேர் கொண்ட அணியைப் பார்ப்போம்.
 
2022 ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி:- 
 
பேட்ஸ்மேன்கள்: ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர்
 
கேஎல் ராகுலுடன் இணைந்து ரோஹித் ஓப்பனிங் விளையாடுவார்.  விராட் கோலியும் ஓப்பனிங் வீரராக களமிறங்கி உள்ளதால் அவரும் பட்டியலில் உள்ளார்.  அப்படி விராட் ஓப்பனிங் இறங்கினால் ராகுல் மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்படலாம்.  சூர்யகுமார் யாதவ் அல்லது ஸ்ரேயாஸ் நான்காவது இடத்தில் களமிறங்குவர். ஐயர் இந்தியாவுக்கான கடைசி டி20 உலகக் கோப்பையில் காத்திருப்பு வீரர்களில் ஒருவராக இருந்தார், ஆனால் இந்த ஆண்டு முக்கிய அணியில் எடுக்கப்படலாம்.
 
2022 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பைக்கான இந்தியாவின் கீப்பராக பந்த் மற்றும் கார்த்திக் ஆகியோரில் ஒருவர் இருப்பார். கார்த்திக் ஃபினிஷராகக் காணப்படுகிறார், பந்த் ஐந்தாவது இடத்தில் விளையாடி வருகிறார்.  சில சமயங்களில் நான்காவது இடத்திலும் விளையாடுகிறார். பந்த் சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிராக ஒரு டெஸ்ட் மற்றும் ஒருநாள் சதத்தை அடித்தார்.
 
ஜடேஜா மற்றும் பாண்டியா இருவரும் கடைசி டி20 உலகக் கோப்பை இந்திய அணியிலும் இடம்பெற்றுள்ளனர். அவர்கள் ICC T20 உலகக் கோப்பை 2022 க்கும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.  ஹர்திக் காயத்தில் இருந்து மீண்டும் பார்மில் உள்ளார்.  ஜடேஜா பல்வேறு வடிவங்களில் இந்தியாவிற்கு நம்பகமான ஆல்-ரவுண்டராக உள்ளார்.
 
தீபக் சாஹர் கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு கிரிக்கெட்டிலிருந்து விலகினார். அவர் தனது நீண்டகால காயம் காரணமாக ஐபிஎல்லையும் தவறவிட்டார், மேலும் 2022 இல் இன்னும் கிரிக்கெட் விளையாடவில்லை. அவர் சரியான நேரத்தில் உடற்தகுதி பெற்றால் நிச்சயமாக டி20 உலகக் கோப்பையில் இடம் பெறுவார். பும்ரா, புவி, ஷமி ஆகிய மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் அணியில் தேர்வு செய்யப்பட உள்ளனர். கடந்த டி20 உலகக் கோப்பையிலும் இந்த மூவரும் அணியில் இடம்பிடித்திருந்தனர்.
 
2022 டி20 உலகக் கோப்பைக்கான இந்தியாவின் சிறந்த கூட்டணி சாஹல் மற்றும் குல்தீப். கடைசி டி20 உலகக் கோப்பைக்கு ரவிச்சந்திரன் அஷ்வின், ராகுல் சாஹர் மற்றும் வருண் சக்ரவர்த்தி ஆகியோரை பிசிசிஐ தேர்வு செய்தது, ஆனால் எதிர்பார்த்தபடி செயல்படவில்லை. 
 
ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ்

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top