இங்கிலாந்து அணிக்கு அபராதம்!
Posted on 20/03/2021

இது தொடா்பாக ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 4-ஆவது டி20 கிரிக்கெட் ஆட்டம் ஆமதாபாதில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணிக்கு பந்துவீச ஒதுக்கப்பட்ட நேரத்தில் அந்த அணி ஓா் ஓவா் குறைவாக வீசியிருந்தது. இதையடுத்து அந்த அணி வீரா்களின் போட்டி ஊதியத்தில் 20 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.