உயர்நீதிமன்ற நீதிபதிக்கே கேள்வி எழுப்பிய வைகோ!
Posted on 02/01/2017

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மரணம் மர்மமாக உள்ளதாக எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி அதிமுகவிலும் ஒருசிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்கெல்லாம் உச்சகட்டமாக இதுகுறித்த வழக்கு ஒன்றில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன், ஜெயலலிதாவின் மரணத்தில் தனக்கே சந்தேகம் இருப்பதாகவும், தேவைப்பட்டால் ஜெயலலிதா உடலை மீண்டும் தோண்டியெடுத்து பரிசோதனை செய்ய உத்தரவிடுவேன் என்றும் கருத்து தெரிவித்திருந்தார்.
நீதிபதியின் இந்த கருத்துக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எதிர்ப்பு தெரிவித்துள்ளார். நீதிபதியின் கருத்து தனக்கு ஆச்சரியம் அளிப்பதாகவும், எந்த ஆதாரத்தை அடிப்படையாக வைத்துக் கொண்டு நீதிபதி இந்த கேள்வியை எழுப்பினார் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
உயர்நீதிமன்ற நீதிபதிக்கே வைகோ கேள்வி எழுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags: News, Art and Culture