சட்டசபையில் நிறைவேறியது ஜல்லிக்கட்டு சட்ட மசோதா!
Posted on 23/01/2017

தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டம், இன்று மாலை, 5:00 மணிக்கு கூடியது. ஜல்லிக்கட்டுக்காக, மிருகவதை தடுப்பு சட்டத்தில் திருத்தம் ஏற்படுத்தி, அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது.
இந்த அவசர சட்டத்தின் சட்ட முன் வடிவு, சட்டசபை சிறப்பு கூட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக, ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் கார்த்திகேய சிவசேனாதிபதி, ராஜேஷ், ராஜசேகரன், ஆதி, அம்பலத்தரசு, மாணவ பிரதிநிதிகள் ஐந்து பேர், நீதிபதி அரிபரந்தாமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.சட்ட முன்வடிவை சட்டசபை சிறப்பு கூட்டத்தில் முதல்வர் பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பின்னர் ஒரு மனதாக இந்த மசோதா நிறைவேறியது. இதன் மூலம், ஜல்லிக்கட்டுக்கு நிரந்த சட்டம் உருவாகியுள்ளது.
Tags: News, Madurai News, Art and Culture