பெங்களூருவிற்கு கிளம்பினார் சசிகலா.. இன்று மாலை சரணடைகிறார்
Posted on 14/02/2017

மாலை 4 மணி முதல் 5 மணிக்கு சசிகலா, இளவரசி, சுதாகரன் பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜராவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலாவுக்கு சரணடைய கால அவகாசம் தர முடியாது என்று சுப்ரீம் கோர்ட் இன்று கூறிவிட்ட நிலையில், சசிகலா போயஸ் இல்லத்திலிருந்து பெங்களூர் நீதிமன்றம் நோக்கி இன்று காலை 11.45 மணியளவில் காரில் புறப்பட்டார்.
மாலை 4 மணி முதல் 5 மணிக்கு சசிகலா, இளவரசி, சுதாகரன் பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜராவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெங்களூர் நீதிமன்றத்தில் சசிகலா உள்ளிட்ட மூவரும் வந்தவுடன் அவர்களின் அடையாளம் உறுதிப்படுத்தப்படும்.
பின்னர் நீதிமன்றக் காவலில் இருந்து போலீஸ் காவலில் சசிகலா ஒப்படைக்கப்படுவார். இதையடுத்து ஒசூர் ரோட்டில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைக்கு சசி கொண்டு செல்லப்படுவார் என்று கூறப்படுகிறது. இங்குதான் சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா தீர்ப்புக்கு பிறகு 21 நாட்கள் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் அடைக்கப்பட்டிருந்தனர். அதேநேரம், பெங்களூர் சிறையில் சசிக்கு முதல் வகுப்பு சிறை கோரப்பட உள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
Tags: News, Madurai News, Art and Culture