400 ரூபாய் நாணயத்தை வெளியிட்ட பிரதமர் மோடி!

400 ரூபாய் நாணயத்தை வெளியிட்ட பிரதமர் மோடி!

பிரதமர் மோடி நேற்று 400 ரூபாய் நாணயத்தை வெளியிட்டதை அடுத்து அந்த நாணயத்தின் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன.

நேற்று தலைநகர் டெல்லியில் குரு தேஜ்பகதூர் 400 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, குரு தேஜ்பகதூர் நினைவாக 400 ரூபாய் நாணயம் மற்றும் தபால்தலையை வெளியிட்டார். இதனையடுத்து அவர் இந்த விழாவில் பேசிய போது, ‘நமது நாடு இன்று குரு தேஜ்பகதூர் அவர்களின் கொள்கையில்தான் முன்னேறி வருகிறது. அதை பார்த்து நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
 
இந்த நல்ல சந்தர்ப்பத்தில் குரு தேஜ்பகதூர் அவர்களின் 400 ரூபாய் நாணயம் மற்றும் தபால் தலையை வெளியிட்டு அவரது பாதங்களில் வணங்கிக்கொள்கிறேன். இந்த விழாவில் கலந்துகொண்ட உங்கள் அனைவருக்கும் எனது நன்றி என்று கூறினார்.
 
மேலும் ஔரங்கசீப்பின் கொடுங்கோல் சிந்தனைக்கு முன் குரு தேக் பகதூர் ‘ஹிந்த் தி சதர்’ ஆகி பாறையாக நின்றார் என்றும், ஔரங்கசீப் பல தலைகளை துண்டித்தாலும் நம் நம்பிக்கையை அசைக்க முடியவில்லை என்பதற்கு இந்த செங்கோட்டையே சாட்சி என்றும், இந்தியா எந்த நாட்டிற்கும், சமூகத்திற்கும் அச்சுறுத்தலாக இருந்ததாக வரலாறே இல்லை என்றும், என்றுமே நாம் முழு உலகத்தின் நலனைப் பற்றி சிந்தித்து வருகிறோம் என்றும் தெரிவித்தார்.

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top