மத்திய அரசுக்கு ஜாக்பாட்!
Posted on 09/04/2022

tax collection :2021-22 நிதியாண்டில் பட்ஜெட் இலக்கைவிட மத்திய அரசின் வரி வருவாய் அதிகரித்து, ரூ.27.07 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது என்று வருவாய் செயலாளர் தருண் பஜாஜ் தெரிவித்துள்ளார்.
2021-22 நிதியாண்டில் பட்ஜெட் இலக்கைவிட மத்திய அரசின் வரி வருவாய் அதிகரித்து, ரூ.27.07 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது என்று வருவாய் செயலாளர் தருண் பஜாஜ் தெரிவித்துள்ளார்.
மத்திய வருவாய் செயலாளர் தருண் பஜாஜ் நேற்று நிருபர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது
கடந்த நிதியாண்டான 2021 ஏப்ரல் முதல் 2022 மார்ச்31ம் தேதிவரை மத்திய அரசின் வரி வருவாய் ரூ.27.07 லட்சம் கோடியாகும். ஆனால், பட்ஜெட்டில் வரிவருவாய் இலக்கு ரூ.22.17 லட்சம் கோடியாகும். ஏறக்குறைய பட்ஜெட் இலக்கைவிட வரிவருவாய் அதிகரித்துள்ளது.
நேரடி வரிகள் வீதம் அதாவது தனிநபர் வருமானவரி, கார்ப்பரேட் வரி ஆகியவை ரூ.14.10 லட்சம் கோடி வசூலாகியுள்ளது. இது பட்ஜெட் இலக்கைவிட ரூ.3.02 லட்சம் கோடி அதிகமாகும்.
மறைமுக வரிகள் வீதம் சுங்கவரி ரூ.12.90 லட்சம் கோடி வசூலாகியுள்ளது. பட்ஜெட்டில் மறைமுகவரி ரூ.11.02 லட்சம் கோடி இலக்கு நிர்ணயித்திருந்தோம். ஆனால், அதைவிட ரூ1.88 லட்சம் கோடி வசூலாகியுள்ளது.
நேரடி வரிகள் ஏறக்குறைய 49 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது, மறைமுக வரிகள் 20 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 2020-21 நிதியாண்டில் ஜிடிபியில் வரிகள் சதவீதம் 10.3 சதவீதமாக இருந்த நிலையில் கடந்த நிதியாண்டில் 11.7 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த 1999ம் ஆண்டுக்குப்பின் இது அதிகரித்துள்ளது
இந்த வரிவசூல் அதிகரித்துள்ளது என்பது பொருளாதாரம் சிறப்பாக மீண்டுவருவதை காட்டுகிறது. மக்கள் அனைவரும் முறையாக வரி செலுத்துகிறார்கள் என்பதைக் காட்டுகிறது. மறைமுக வரிகளைவிட நேர்முக வரிகள் அதிகரித்துள்ளது. இந்த முறை அடுத்துவரும் ஆண்டுகளில் தொடர்ந்திருக்கும்.
2021-22 ம் ஆண்டு பட்ஜெட்டில் வரிவருவாய் ரூ.22.17 லட்சம் கோடி வசூலாகியுள்ளது. பட்ஜெட்டில் குறிப்பிட்ட இலக்கைவிட திருத்தப்பட்டஅறிக்கையில் குறைத்து ரூ.19 லட்சம் கோடியாக மத்திய அரசு குறைத்தது. ஆனால்அனைத்தையும் விட வருவசூல் அதிகரித்துள்ளது.
கார்ப்பரேட் வரி 56.1 சதவீதமும் , தனிநபர் வருமானவரி 43 சதவீதமும் அதிகரித்துள்ளது, சங்கவரி 48 சதவீதமும் அதிகரித்துள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போரால் ஏற்றுமதி, இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நடப்பு நிதியாண்டில் வரிவருவாயில் எந்த அளவுக்கு மாற்றம் இருக்கும் என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
Tags: News