சௌராஷ்டிரா மொழிக்கு பாஷா சம்மான் விருது!
Posted on 22/12/2016

1996 இல் பாஷா சம்மன் (Basha Samman) விருது தொடங்கப் பட்டது. ஆண்டுதோறும் மூன்று அல்லது நான்கு மொழிகளில் இவ்விருது வழங்கப் படும். இங்கு பாஷா என்பது மொழி என்று பொருள்படும். இது ஏதோ ஒரு இசுலாமிய அறிஞரின் பெயர் என்று நினைத்தல் வேண்டாம். இவ்விருதின் பரிசுத்தொகை ரூ ஒரு லட்சம்.
சாகித்ய அகாதெமி இந்த ஆண்டிற்கு அங்கீகரிக்கப்படாத மொழியான சௌராஷ்ட்ரா, குருக், லடாக்கி மற்றும் ஹல்பி ஆகிய மொழிகளின் வளர்ச்சிக்கு உதவிய எழுத்தாளர்களுக்கு பாஷா சம்மான் விருதுகள் அறிவிக்கப்பட்டது.
அந்த வகையில்சௌராஷ்ட்ரா மொழியின் வளர்ச்சிக்காக மதுரையைச் சேர்ந்த முனைவர் டிஆர் தாமேதரன் மற்றும் டி எ சரோஜா சுந்தரராஜன் ஆகியோர் விருதிற்காக தேர்வு பெற்றிருக்கிறார்கள்.
Tags: News, Lifestyle, Art and Culture