நான் இதில் நடித்ததை நினைத்தால் எனக்கே அருவருப்பாக இருக்கு!

நான் இதில் நடித்ததை நினைத்தால் எனக்கே அருவருப்பாக இருக்கு!

தமிழ் சினிமாவில் நடிகையாகத் துவங்கி, பின்னர் பாலிவுட், தற்போது ஹாலிவுட் என கலக்கி வருபவர் ப்ரியங்கா சோப்ரா. 'குவான்டிகோ', 'பேவாட்ச்' ஆகியவற்றில் நடித்ததால் ஹாலிவுட் ரசிகர்களுக்கும் ஃபேவரிட் ஆகிவிட்டார்.

இவர் ஆரம்ப காலத்தில் ஒரு விளம்பரத்தில் நடித்ததை நினைத்தால் தற்போது தனக்கே அருவருப்பாக இருப்பதாக தெரிவித்துள்ளார். முகத்தை வெள்ளையாக்கும் எனக் கூறி விற்கப்படும் கிரீம் விளம்பரம் பற்றித் தான் இப்படித் தெரிவித்துள்ளார். அப்போது அறியாமையால் அந்த விளம்பரங்களில் நடித்துவிட்டேன். டூத்பேஸ்ட்டுக்கு அடுத்து அதிக விற்பனையாகும் பொருள் ஃபேஸ் க்ரீம்கள்தான். நிறத்தால் பல பெண்களுக்கு தாழ்வு மனப்பான்மையைத் தோன்ற வைத்ததற்காக வெட்கப்படுகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

உண்மையைப் புரிந்துகொண்ட உடனே அந்த விளம்பர ஒப்பந்தத்தில் இருந்து விலகிவிட்டதாகவும், இனி அப்படிப்பட்ட விளம்பரத்தில் நடிக்கவே மாட்டேன் எனவும் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். மகிழ்ச்சி என்பது நிறத்தில் இல்லை, நிறம் சார்ந்து உள்ள பாகுபாட்டைத் தான் வெறுப்பதாகவும் பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்.

Tags: News, Hero, Lifestyle, Star

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top