தமிழக அமைச்சரவையின் 31 அமைச்சர்களின் பட்டியல்!

தமிழக அமைச்சரவையின் 31 அமைச்சர்களின் பட்டியல்!

எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற்று உள்ள அமைச்சர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. ஓ.பன்னீர் செல்வம், மாஃபா பாண்டியராஜன் தவிர மற்ற அமைச்சர்கள் அனைவருக்கும் அதே இலாக்காக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அமைச்சரவையில் புதிதாக கே.ஏ. செங்கோட்டையன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இடம் பெற்றுள்ளார். 

31 அமைச்சர்களின் பட்டியல்

1. எடப்பாடி பழனிச்சாமி - முதல்வர், நிதித்துறை, உள்துறை உள்ளிட்ட பல துறைகள்

2. திண்டுக்கல் சீனிவாசன் - வனத்துறை

3. செங்கோட்டையன் - பள்ளி கல்வித்துறை

4. செல்லூர் ராஜூ - கூட்டுறவு துறை

5. தங்கமணி - மின்துறை மற்றும் மதுவிலக்கு

6. எஸ்.பி.வேலுமணி - உள்ளாட்சி துறை

7. ஜெயக்குமார் - மீன்வளத்துறை

8. சி.வி. சண்முகம் - சட்டத்துறை

9. அன்பழகன் - உயர்கல்வி

10. சரோஜா - சமூக நலத்துறை

11. எம்.சி சம்பத் - தொழில்துறை

12. கருப்பண்ணன் - சுற்றுசூழல்துறை

13. காமராஜ் - உணவு மற்றும் சிவில் சர்வீஸ் பொதுவிநியோகம்

14. ஓ.எஸ்.மணியன் - கைத்தறி மற்றும் ஜவுளித்துறை

15. உடுமலை ராதாகிருஷ்ணன் - வீட்டுவசதி மற்றும் நகர மேம்பாடு

16. விஜயபாஸ்கர் - சுகாதாரத்துறை

17. துரைக்கண்ணு - விவசாயத்துறை

18. கடம்பூர் ராஜூ- செய்தி துறை

19. உதயகுமார் - வருவாய்த்துறை

20. வெள்ளமண்டி நடராஜன் - சுற்றுலா துறை

21. வீரமணி - வணிக வரித்துறை

22. ராஜேந்திரபாலாஜி - பால்வளத்துறை

23. பெஞ்சமின் - ஊரக தொழில்துறை

24. நிலோபர் கபில் - பணியாளர் நலத்துறை

25. எம்.ஆர்.விஜயபாஸ்கர் - போக்குவரத்து துறை

26. மணிகண்டன் - தகவல் தொழில்நுட்பத்துறை

27. ராஜலட்சுமி - ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி நலத்துறை

28. பாஸ்கரன் - காதித்துறை

29. சேவூர் ராமச்சந்திரன் - அறநிலையத்துறை

30. வளர்மதி - பிற்பட்டோர் நலத்துறை

31. பாலகிருஷ்ண ரெட்டி - கால்நடைத்துறை

ஓ.பன்னீர் செல்வத்தின் அமைச்சரவையில் இடம்பெற்றவர்களுக்கு அதே துறை ஒதுக்கப்பட்டுள்ளது. மாஃபா பாண்டியராஜனுக்கு பதில் பள்ளிக்கல்வித்துறை செங்கோட்டையனுக்கு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: News, Art and Culture

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top