எளிதில் கற்கலாம் ஆங்கிலம்!

எளிதில் கற்கலாம் ஆங்கிலம்!

இன்று பெரும்பாலும் எந்த ஒரு பணியிலும் சேர்வதற்கும் ஆங்கிலம் என்பது கட்டாயமான ஒன்றாக இருக்கிறது, அதிலும் குறிப்பாக பெண்களுக்கு. கால்சென்டர்களில் பணியாற்ற விரும்புவோர் அனைவருக்கும் ஆங்கிலம் என்பது கட்டாயம். ஆனால் அதிகமானோருக்கு ஆங்கிலத்தில் நம்மால் சரியாக பேசமுடியுமா என்கிற பயம் கலந்த தயக்கம் அதிகமாகவே இருக்கிறது. ஆங்கில வழி கல்வி கற்றவர்களுக்கும் இந்த தயக்கம் இருக்கும். உயர்படிப்பு படிக்க வேண்டுமென்கிற பட்டதாரிகளுக்கும், பணியில் சேரவிருப்போருக்கும், ஆங்கிலத்தில் சரளமாக பேச வேண்டுமென்று விரும்புவோருக்கும் பிரத்யேகமாக ஆங்கில வகுப்புகளை பெண்களுக்காக நடத்தவுள்ளார்கள் புனித சார்லஸ் கல்வியியல் கல்லூரி. இதில் ஆண்களுக்கும் கலந்துக்கொள்ள வாய்ப்புகள் அளிக்கப்படும்.

இந்த வகுப்புகளைக் குறித்து அக்கல்லூரியின் முதல்வர் சிஸ்டர் அமலி அவர்களிடம் கேட்டபொழுது:

‘இந்த வகுப்புகளுக்கு தற்போது பலரும் விண்ணப்பித்துள்ளார்கள். விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஏப்ரல் 26-ம் தேதி. அதனைத் தொடர்ந்து நாங்கள் வகுப்புகளை திருமங்கலம் பேருந்து நிலையத்தின் அருகில் உள்ள புனித ப்ரான்சில் பள்ளியில் துவங்கவுள்ளோம். இந்த வகுப்புகள் ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் திங்கள் முதல் வெள்ளி வரை சுமார் நான்கு வாரங்கள் நடத்தப்படும். இதற்காக பதிவு கட்டணம் 500 ரூபாயாகவும் நிர்ணயித்துள்ளோம்.

இந்த பயிற்சி வகுப்பினை ருமு நாட்டோடு இணைந்திருக்கும் ஒரு நிறுவனத்தின் மூலமாக வழங்கவுள்ளோம். இதில் கலந்துக்கொள்வோருக்கு உலகளவிலான அங்கீகாரம் அளிக்கும் வகையிலான சான்றிதழையும் வழங்குகிறோம். இந்த வகுப்பில் ஆங்கிலத்தில் பேசும் பயத்தை நீங்கி, என்னாலும் ஆங்கிலம் பேச முடியும் என்கிற ஒரு நம்பிக்கையை அவர்களுக்குள் வரவழைப்போம். இதற்கு அடுத்தப்படியாக பள்ளி மாணவ மாணவியருக்கும் இது போன்ற வகுப்புகளை நடத்தவுள்ளோம். அதற்கான தேதிகளை எங்களுடைய கல்லூரியில் தொடர்புக் கொண்டு அறிந்துக்கொள்ளலாம்’ என கூறினார்.

Tags: News, Lifestyle, Art and Culture

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top