“காக்காத்துருத்து' உப்பங்கழித்தீவுக்கு போகலாம் வாங்க!

“காக்காத்துருத்து\' உப்பங்கழித்தீவுக்கு போகலாம் வாங்க!

இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் தம்மைப் பற்றி சிந்திக்கவும், இந்த உலகில் சில பகுதி களில் வாய்க்கப் பெற்றிருக் கும் மிக அழகான ரம்மிய மான இயற்கை அழகை ரசிக் கவும் நம்மால் முடிவதில்லை. ஆனாலும் ஊடகங்கள் யாவும், கவலைகள் எல்லா வற்றையும் உதறித் தள்ளி விட்டு நேரில் சென்று பார்த்து ரசித்து மனதிற்கு புத்துயிர் அளிக்கக் கூடிய அற்புதமான இடங்களை அடையாளம் கண்டு நமக்கு அளித்துக் கொண்டே தான் இருக்கின்றன.

இன்னும் சொல்லப் போனால் இதுவரையிலும் மனித சமுதாயம் அறிந்தி டாத வரலாற்று பெருமைகள் மிகுந்த ஆன்மீகச் மற்றும் சுற்றுலாத் தலங்களையும் கூட இயற்கை ஆர்வலர்கள் ஆராய்ந்து கண்டுபிடித்து அதைப் பற்றிய செய்திகளை நமக்கு அளித்தும் வருகின் றார்கள். இத்தகைய இடங் களை எப்போதாவது ஒரு முறையோ அல்லது வருடத் தில் பலமுறையோ நேரில் சென்று ரசித்து வருவதால் மனதிற்கும் உடலுக்கும் புத்து ணர்ச்சி கிடைக்கும் என்பது மறுக்க முடியாத உண்மையா கும். கேரள மாநிலத்தில், கொச்சிக்கு அருகாமையில் கடலுக்கு வெளியில் “பேக் வாட்டர்' எனச் சொல்லப் படுகின்ற அலையற்ற தேங் கிய நீரால் சூழப்பட்டதே “காக்காத்துருத்து என்கின்ற உப்பங்கழி தீவு. மனிதர் களின் கைகளும் செயல்பாடு களும் ஈடுபடுத்தப்படாத இந்த தீவு சுற்றுலா தலங் களில் நேரில் சென்று கண்டு களிக்கக் கூடிய ஒரு முக்கிய மான இடத்தை பிடித்துள் ளது. காலைக் கதிரவன் உல கினை தன் பொன் வண்ணச் சுடர்களால் தீண்டும் போது, இயற்கையின் மங்களச் சடங் குகள் அதாவது இலைகளின் மேல் தங்கியிருக்கும் நீர்த் துளிகள் வைரக் கற்கள் போல் பளிபளிச்சென மின்ன வும், அங்கே காணப்படு கின்ற நீர்ப்பரப்பானது, அதி காலையை கடந்த பொழுதில் தங்கமூலாம் பூசப்பட்டது போலவும் காண்போர் மனதை கவர்ந்திழுப்பதை இங்கே காணலாம்.

பறவைகளின் இனிமை யான ஒலியும், புல் பூண்டு களில் பசுமையான காட்சி யும் நம்மை ரம்மியத்தில் லயிக்கச் செய்கின்றன. கேரள மாநிலம் முழுவதுமே, கடலும் கடல் சார்ந்த இடமும் ஒன்றிணைந்து இயற்கை எழில் ததும்பும் பசுமையின் வளமையை வெளிப்படுத் திக் கொண்டிருக்கின்றது என் றால் அது மிகையாகாது. பிர தான நிலப்பரப்பிலிருந்து இந்த அழகிய காக்காத்து ருத்து உப்பங்கழி தீவை சாதா ரண பாரம்பரிய படகுகளின் மூலமாக சென்றடைந்து விட லாம். இந்த பகுதியின் மீன வர்கள், இருளோடு கூடிய இரவு குவிவதற்கு முன்பா கவே தம்முடைய அன்றாட மீன்பிடி தொழிலை துவங்கி, சூரியனின் ஒளிக்கரங்கள் தீவை தீண்டும் வேளையில் கரை சேர்ந்து விடுவார்கள். காக்காத்துருத்து தீவைச் சுற்றி லும் வேம்பநாடு என்னும் மிகப் பெரிய நீர்ப்பரப்பை கொண்ட ஏரி சூழ்ந்திருக்கின் றது. இங்கு கண்ணுக்கினிய  வண்ணங்களில் ஆயிரக் கணக்கான பறவைகள் வாழ்ந்து கொண்டிருக்கின் றன. இதனால் இந்த வேம்ப நாடு ஏரி பறவை பார்வையா ளர்களுக்கு ஒரு சொர்க்க பூமி யாக கருதப்படுகின்றது. காக்காத்துருத்துத் தீவும் அத னைச் சுற்றியுள்ள எவ்வன மான இடங்களும் தனது இயற்கை எழில்களால் இங்கு வரும் சுற்றுலா பயணிகளை மயக்குவதன் காரணமாகத் தான், இந்த இடத்திற்கு ஆயிரக்கணக்கான சுற்றுலா ஆர்வலர்கள் வருடம் முழுவ தும் உலகின் பல பாகங்களி லிருந்தும் தொடர்ந்து வந்து கண்டு களித்து செல்கின்றார் கள். அத்துடன் காக்கத்துருத் துச் சுற்றுலா தளம் உலகச் சுற்றுலா வரைப்படத்திலும் ஒரு முக்கியமான இடத்தை பெற்று விட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
 

- அபிதா மணாளன்

Tags: News, Beauty, Lifestyle

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top