ஜிஎஸ்டி கேள்விகளும் பதில்களும்!

ஜிஎஸ்டி கேள்விகளும் பதில்களும்!

அட்வென்சரின் கடந்த இதழில் ஜிஎஸ்டி, சிஜி எஸ்டி, எஸ்ஜிஎஸ்டி மற்றும் ஐஜிஎஸ்டி ஆகியவை தொடர்பான சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் வகையில் கேள்வி பதிலாக வாசகர்களின் நன்மையை கருத்தில் கொண்டு தெளிவான விளக்கங்களை அளித்திருந்தோம்.

அதனில் எந்தெந்த சந்தர்ப்பங்களில் இந்த வரிகள் விதிக்கப்படுகின்றன, அவை எத்தனை சதவீதங்கள் விதிக்கப்பட வேண்டும், அவை எப்படி பிரித்துக்காட்டி பட்டியலில் இடப்பட வேண்டும் என்றெல்லாம் விளக்கி கூறியிருந்தோம். ஒரே நபருக்கு இரண்டு விதமான வருமானங்கள், அதாவது வரி தொடர்பில்லாத மருத்துவ வருமானம் மற்றும் வாடகைக்கு விடப்படுகின்ற வணிக வளாகம் ஆகியவற்றிலிருந்து கிடைக்கப்பெறுகின்ற வருமானங்களை ஜிஎஸ்டி வரிக்கு எப்படி கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது பற்றியெல்லாம் அடிப்படை விபரங்கள் அடங்கிய குறிப்புகளை வழங்கியிருந்தோம்.

இந்த இதழில் ஜிஎஸ்டி வரி விதிப்பில் ஒரு அம்சமான "Composition Scheme" பற்றியதான விளக்கங்களை வாசகர்களின் நன்மையை கருத்தில் கொண்டு கேள்வி பதில் வடிவத்தில் கீழே தந்திருக்கின்றோம். இவை வாசகர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகின்றோம்.

காம்பேசிஷன் ஸ்கீம் (Composition Scheme) என்றால் என்ன?

காம்போசிஷன் ஸ்கீம் என்பது குறு வணிகம், சிறு வணிகம் மற்றும் நடுத்தர வணிகத்தில் ஈடுபட்டுள்ள, பொருட்களை விற்கும் நபர்களுக்கு அதாவது சில்லரை வணிகம், சிற்றுண்டிகள், குடிசைத் தொழில் உற்பத்தியாளர்கள் ஆகியோருக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். காம்போசிஷன் ஸ்கீமின் கீழ் வரவிரும்பும் வணிகர்கள் குறைந்த % வரிகளை செலுத்திக் கொள்ளலாம்.

காம்போசிஷன் ஸ்கீம் வரிவிதிப்பின் கீழ் வருவதற்கு தகுதியானவர்கள் யார்?

கடந்த நிதி ஆண்டில் ஒருவருடைய ‘Turnover‘ 75 லட்சங்களுக்குகீழ் இருந்திருக்குமாயின் இவர் ஜிஎஸ்டி வரி விதிப்பின் கீழ் காம்போசிஷன் ஸ்கீமை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இந்த ஸ்கீம் ‘Service Provide‘-க்குக் கிடைக்காது.

காம்போசிஷன் ஸ்கீமின் கீழ் குறைந்த % வரி என்பது என்ன?

காம்போசிஷன் ஸ்கீமின் கீழ் விதிக்கப்பட வேண்டிய குறைந்த விகித வரிகள் கீழ்கண்டவாறு:

Manufacturer - ஈட்டப்பட்ட Turnover-ல் 2 சதம் (ஒரு சதம் சிஜிஎஸ்டி மற்றும் ஒரு சதம் எஸ்ஜிஎஸ்டி)

Restaurant - ஈட்டப்பட்ட Turnover-ல் 5 சதம் (2.5 சதம் சிஜிஎஸ்டி மற்றும் 2.5 சதம் எஸ்ஜிஎஸ்டி)

Other goods supplier - ஈட்டப்பட்ட Turnover-ல் 1 சதம் (0.5 சதம் சிஜிஎஸ்டி மற் றும் 0.5 சதம் எஸ்ஜிஎஸ்டி)

Composition Scheme விதிப்பின் கீழ் உட்பட விரும்பும் ஒரு நபர் திருப்திப்படுத்த வேண்டிய நிபந்தனைகள் என்னென்ன?

காம்போசிஷன் ஸ்கீமின் கீழ் வரவிரும்பும் நபர்கள் கீழ்கண்ட நிபந்தனைகளை திருப்தி செய்ய வேண்டும்.

அ. இந்த சட்டத்தின் கீழ் வரி விதிக்கப்பட முடியாத எந்தவொரு பொருளையும் சப்ளை செய்வதில் ஈடுபட்டவராக இருக்கக்கூடாது.

ஆ. Inter State பொருட்களை வெளியில் அனுப்பும் வணிகத்தில் (Outward Supply) ஈடுபட்டவராக இருத்தல் கூடாது.

இ. இ-காமர்ஸ் ஆப்ரேட்டர் மூலமாக பொருட்களை சப்ளை செய்பவராக இருத்தல் கூடாது.

ஈ. ஐஸ்கிரீம் உற் பத்தியாளராகவோ, பான் மசாலா அல்லது புகையிலை உற்பத்தியாளராகவோ இவர் இருத்தல் கூடாது.

CTP (Composition Taxable Person) எனப்படுகின்ற காம்போசிஷன் வரிவிதிப்பிற்கு கீழ் வருகின்ற நபர் (ITC) எனப்படுகின்ற இன்புட் டாக்ஸ் கிரெடிட்டை எடுத்துக் கொள்ளலாமா?

காம்போசிஷன் ஸ்கீம் வரிவிதிப்பின் கீழ் வருகின்ற நபரானவர் இன்புட் டாக்சை கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது.

காம்போசிஷன் ஸ்கீம் வரி விதிப்பின் கீழ் வருகின்ற நபரானவர் வரியை பெறு பவரிடமிருந்து (ரிசிபியண்ட்) வசூல் செய்ய இயலுமா?

வெளியில் செய்யப்படும் சப்ளைக்கு சிடிபி (CTP) காம் போசிஷன் டாக்சபள் பெர்சன் பெறுபவரிடமிருந்து எந்த வரியையும் வசூலிக்க இயலாது. உதாரணமாக அவருடைய வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப்படுகின்ற பில்களில் சிஜிஎஸ்டி எஸ்ஜி எஸ்டி முதலியவை வசூலிக்க இயலாது. சிடிபி என்பவர் செலுத்த வேண்டிய வரியை சலுகை விகிதத்தில் அவருடைய சொந்த பொறுப்பிலேயே செலுத்துதல் வேண்டும்.

காம்போசிஷன் ஸ்கீமிற்கு எவ்விதம் விண்ணப்பித்தல் வேண்டும்?

காம்போசிஷன் ஸ்கீமின் கீழ்வரும் நபரானவர் பார்ம் GST CMP01 என்கின்ற விண்ணப்ப படிவத்தினை 2017 ஆகஸ்ட் 16-ம் தேதிக்கு முன்பாக பூர்த்தி செய்து ஜிஎஸ்டி போர்டலில் (www.gst.gov.in) பைல் செய்ய வேண்டும். 

காம்போசிஷன் ஸ்கீமின் கீழ் வந்துள்ள நபரானவர் என்னென்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்?

காம்போசிஷன் ஸ்கீமின் வரிவிதிப்பின் கீழ் வந்துவிட்ட ஒரு நபரானவர் ‘காம்போசிஷன் டாக்சபிள் பெர்சன்‘ என்ற வாசகத்தினை ஒவ்வொரு நோட்டீசிலும் அல்லது சைன் போர்டிலும் முக்கியமான இடத்தில் அவருடைய வியாபார இடத்தில் டிஸ்பிளே செய்ய வேண்டும். இதர இடங்களில் உள்ள கிளை வணிக நிலையங்களிலும் இவ்வாறே செய்தல் வேண்டும்.

சிடிபி வரி விதிப்பின் கீழ் உள்ள ஒருவர் டாக்ஸ் இன் வாய்ஸ் வழங்க முடியுமா?

சிடிபி நபர் டாக்ஸ் இன் வாய்ஸ் கொடுக்க இயலாது. “பில் ஆப் சப்ளை” எனப்படுகின்ற டாக்ஸ் பத்தி இடம்பெறாத தஸ்தாவேஜையே அவர் கொடுக்க இயலும். இந்த பில்லானது கொடுக்கப்படுகின்ற பொருளின் மதிப்பை மட்டுமே காட்டுவதாக இருக்கும்.

பில் ஆப் சப்ளையில் வேறு ஏதேனும் தகவல்கள் கொடுக்கப்பட வேண்டுமா?

சிடிபி கொடுக்கின்ற பில் ஆப் சப்ளையில் காம்போசிஷன் டாக்சபிள் பெர்சன், வரி வசூலிக்க தகுதியில்லை என்று பில்லின் தலைப்பில் குறிப்பிடவேண்டும்.

எம்ஆர்பி பொருட்களுடன் வணிகம் செய்யும் சிறு வணிகர்களுக்கு காம்போசிஷன் ஸ்கீம் ஒரு வரப்பிரசாதமாகும். பியிலிருந்து பிக்குலேவாதேவி செய்யும் பெரிய அளவிலான வியாபாரிகளுக்கு இந்த ஸ்கீம் உகந்ததாக இருக்காது. இனி நாம் காபியோ டீயையோ குடிப்பதற்கு முன் அது சூடாக இருக்கிறதா என்று மட்டும் பார்த்தால் போதாது. அந்த கடைக்காரர் ‘Composition Scheme‘யில் பதிவு செய்து குறைந்த வரி கட்டுபவரா அல்லது நம்மிடம் அதிக வரி வாங்குபவரா என்பதையும் பார்க்க வேண்டும்.

என்ன நண்பர்களே காபி சுடுதா!!!

ஜிஎஸ்டி பற்றியதான கூடுதல் விபரங்களை அறிந்திட உங்கள் கேள்விகளை அட்வென்சர் இதழுக்கு எழுதி அனுப்பவும். அதற்கான பதில்கள் அட்வென்சரின் அடுத்த இதழில் பிரசுரிக்கப்படும்.

Tags: News, Lifestyle

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top