மதுரையில் அஷ்டமி சப்பரம்!
Posted on 06/01/2021

06-01-2021 மதுரையில் அஷ்டமி சப்பரம் நான்கு மாசி வீதிகளிலும் மீனாட்சி சுந்தரேஸ்வரருடன் வலம் வந்தது. இந்த அஷ்டமி சப்பரம் என்பது, “கல்லினுள் தேரைக்கும், கருப்பை உயிர்க்கும் புல்லுணவே தந்து போற்றும் தயாளன்” என்ற வாக்கினை மெய்ப்பிப்பதாகும். தேய்பிறை அஷ்டமியில் இந்த வைபவம் நடைபெறுகின்றது. 06.01.2021 முற்றிலும் பெண்களே அஷ்டமிச் சப்பரத்தை இழுத்தனர்.
அஷ்டமிச் சப்பர உலாவினை ”படியளக்கும் உலா” என்றே அழைக்கின்றார்கள். இந்த அஷ்டமி சப்பர பவனியை கண் குளிரக் கண்டால் பெரும் புண்ணியம் என்றும், வாழ்வாதாரம் குறைவற்று இருக்கும் என்றும் மக்களால் நம்பப்படுகின்றது!