இந்திய பிரஜைகளின் பொருளாதார கடமை

இந்திய பிரஜைகளின் பொருளாதார கடமை

பெரிய தொகைகள் உள்ள ரூபாய் நோட்டுக்களைச் செயலிழக்கச் செய்த பிரதமரின் சமீபத்திய நடவடிக்கை குறிப்பிடத்தக்கது. புரட்சிகரமானது, பாராட்டத்தக்கது. “தூய்மை இந்தியா” பணியின் தெளிவான வெளிப்பாடு இது. சட்டத்தைப் பின்பற்றும் குடிமக்களுக்குப் பரவசத்தையும், தன் தொழிலைச் சற்றே வஞ்சகமாக நடத்துபவர் களுக்கு பதற்றத்தையும் இது அளித்திருக்கிறது. முன்னெச்சரிக்கை இல்லாமல் இந்த நட வடிக்கை எடுக்கப்பட வில்லை. இதற்கான அறி குறிகள் முன்னமே தென்பட்டன. உங்களுக் குத்தான் தெரியுமே, மக்கள் அவற்றை எல்லாம் பொருட்படுத்துவதில்லை.

பொருளாதாரம் சார்ந்த அனைத்துச் செயல்களையும் நெறிப்படுத்த தேவை யான சரியான நடவடிக்கை இது. இதனால், பாரம்பரியத் தொழில்கள் சில காலம் குழப்பத்திற்கு உள்ளாக லாம். பொதுமக்களில் பலர் தர்ம சங்கடத்திற்கு ஆளாகலாம். நம் தேசத்தில் கிட்டத் தட்ட 50 சதவிகிதப் பரிவர்த்தனைகள் வருமான வரியின் ரேடார் பார்வையின் கீழ் வருவதில்லை. மக்கள் தப்பு தவறுகளில் ஈடுபடுவதால் அல்ல. இதற்குப் பல காரணங்கள் உண்டு. தாங்கள் கட் டும் வரிப்பணம், கட்டமைப் புகளாகவோ, சேவைகளா கவோ, வேறு வழிகளிலோ அவர்களுக்குத் திரும்பக் கிடைப்பதில்லை என்கிற எண்ணம் மக்களிடம் இருக்கிறது. இதனால், “நான் வரி கட்டத் தேவையில்லை” என்கிற மனப்பான்மை ஏற்பட்டு விட்டது.

ஆனால் நமது தேசத்தில் இதனைச் சீராக்கும் நேரம் வந்துவிட்டது. இதனால் சிரமங்கள் ஏற்படும். மக்கள் காயப்படுவார்கள், நாம் இவற்றை எதிர்கொள்ள வேண்டித்தான் இருக்கிறது. தேசத்திற்குக் கொஞ்சம் சிரம மான அறுவை சிகிச்சை தேவையாய் இருக்கிறது. ஏனெனில், இந்தியாவின் பொருளாதாரம் பூத்துக் குலுங்கப்போகிறது. முழு உலகமும் இந்தியாவை ஒரு சாத்தியமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறது.

ஊழல், திறமையின்மை, எடுத்த காரியத்தை முடிக்கா மல் அவற்றை சொதப்புவது என நம் செயல்களின் மீதுள்ள பயத்தால் உலகம் இந்தியாவில் முதலீடு செய் வதையும், நம்முடனான நிதி சார்ந்த செயல்பாடுகளையும் தவிர்த்து, ஒதுங்கியே செல் கிறது. தற்சமயம், இந்தக் கண்ணோட்டத்தில் வேக மாய் மாற்றம் ஏற்பட்டு வரு கிறது. நிதி சார்ந்த சந்தைகள் இந்தியாவை நோக்கித் திரும் பியிருக்கின்றன. அனைத் துமே மிக மிக விரைவாய் மாறுவதை நீங்கள் காண்பீர் கள். இந்த மலர்ச்சி நிலை யாய் இருக்க வேண் டுமென்றால், அனைத்துமே கண் பார்வை பரப்பிற்குள் இருப்பது அவசியம் பூமிக் குள் எதுவும் பதுக்கப் படக் கூடாது. உலகம் நம்முடன் இணைந்து செயல்பட நம்மை எல்லா நிலைகளி லும் தூய்மை செய்து கொள் வது முக்கியம்.

நம்மை புணர்நீர்மாணம் செய்துகொள்ள வேண்டிய நேரமிது, நமக்கு முன்னெப் போதும் இல்லாத வகையில், உலகுடன் தொடர்பு ஏற்பட்டி ருக்கிறது. தேவையான மாற்றங்களை ஏற்படுத்தும் உறுதிகொண்ட தலைமை தற் போது உள்ளது. வருங் காலத்தில் வரவிருக்கும் தலைவர்களும் இப்படிப் பட்ட குணத்துடன்தான் இருக்கப் போகிறார்கள்.

ஏனெனில், இப்போதி ருக்கும் தலைமுறை, வாய் வார்த்தைகளில் ஜாலம் செய்பவர்களுக்கு ஓட்டளிக்கப் போவதில்லை. செயல்கள் நடைபெற வேண்டும் என்று மக்கள் நினைக்கின்றனர். வரும் ஆண்டுகளில் சிறந்த இந்தியாவை, புது இந்தியாவை நாம் காண்போம் என்பது உறுதி. தனிப்பட்ட மனிதர்கள் ஒவ்வொரு வரும், அவர் என்ன செய்து கொண்டிருந்தாலும், அவர் கைகளில் என்ன பொறுப்பு இருந்தாலும், அவர்கள் அனைவரும் எழுந்து நின்று இதனை நிகழச் செய்ய வேண்டும். வெறும் அரசாங்கத்தால் இவற்றைச் செய்ய இயலாது.

 

Tags: News, Lifestyle, Art and Culture

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top