*இலக்கணப் பிழை*

*இலக்கணப் பிழை*

தமிழ் சினிமாவில் திருநங்கைகளை மையப்படுத்தி அவ்வபோது சில படங்கள் வெளிவருவதுண்டு. சில ஆண்டுகளுக்குமுன் விஜய்சேதுபதி ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் திருநங்கையாக நடித்திருந்தார். 

இப்போது திருநங்கைகள் தினத்துக்காக ஒரு பாடல் உருவாகியுள்ளது.
 
சமூகத்தில் தாங்கள் செய்யாத குற்றத்திற்காக ஏளனப் பார்வை, தீண்டாமை என்னும் தண்டனை அனுபவித்து வரும் பாவப்பட ஜீவன்கள் திருநங்கைகள்தான். எனவே, அவர்களின் சமூகப் பாதுகாப்பைக் கருதி, அவர்களின் சிறப்பை வலியுறுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15 ஆம் நாளை ‘திருநங்கையர் நாள்’ எனக் கொண்டாட தமிழக அரசு மார்ச் 11, 2011 அன்று அரசாணை பிறப்பித்தது.
 
திருநங்கைகள் தினத்துக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்தப் பாடலை இசையமைப்பாளர் டி.இமானால் அறிமுகப்படுத்தப்பட்ட பாடகர் திருமூர்த்தி உருக்கமான குரலில் பாடியுள்ளார். இவர் செவ்வந்தியே மதுவந்தியே பாடல்மூலம்  உலக புகழ் பெற்றவர். கொரொனா பரவலால் பாடகர் திருமூர்த்தி சென்னை வர இயலாத சூழலில் இசையமைப்பாளர் ஷாஜகான் அவரது சொந்த ஊரான ஊத்தங்கரைக்கே சென்று ஒலிப்பது செய்துள்ளார்.
 
*‘பாலு தயிறு மோரு எல்லாம் திரிதல் தானுங்க- இந்த பாலினத்தின் திரிதலுல தப்பு இல்லிங்க’, ‘பொதுமறையில இருக்கு மூனு பாலுங்க- அதே பொதுவெளியில இருந்தா என்ன குத்தங்க’*என்பது போன்ற தெறிக்கும் வரிகளில் கவனம் ஈர்க்கிறார் பாடலாசிரியர் செந்தமிழ். 
 
"திருநங்கைகள் குறித்து பாக்யா வார இதழில் சிறுகதை எழுதினேன்.அதைப் படித்துவிட்டு இயக்குநர் கே.பாக்யராஜ் அதன் கதையமைப்பை பாராட்டினார். சிறுகதை ரீச்சை விட பாடல்வடிவமாக வெளிவந்தால் அதிகமாக மக்களிடம் சென்றடையும் என்று அவர் தெரிவித்த கருத்து தான் இந்த பாடல் உருவாக அடித்தளம் என்கிறார் பாடலாசிரியர் செந்தமிழ்.
 
ஜெய் நடிக்கும் எண்ணித்துணிக, கிஷோர் நடிக்கும் ரூஸ்டர், மோசமான கூட்டம் போன்ற படங்களில் பாடல்கள் எழுதி வரும் செந்தமிழின் படைப்புகள் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் ஆய்வுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இயக்குநர்கள் ‘க/பெ ரணசிங்கம்’ விருமாண்டி, இ.வி கணேஷ்பாபு, ரூஸ்டர் ராம் GV, மோசமான கூட்டம் முனியப்ப குமார், டூ ஶ்ரீராம், தம்பிகோட்டை ராகேஷ், எண்ணித்துணிக தயாரிப்பாளர் சுரேஷ்,  தொகுப்பாளிினி டோஷிலா மற்றும் திருநங்கைகள் நலச்சங்க தலைவர் உட்பட ஏராளமான பிரமுகர்கள் இந்தப் பாடலை வெளியிட்டுள்ளனர். 
 
சமீபத்தில் வெளியான மூத்த குடிகள் பற்றிய ‘எஞ்சாய்-எஞ்சாமி’ தனிப்பாடல் போல, ‘இலக்கணப்பிழை’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தனிப்பாடலும் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

 

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top