காதலை கவித்துவமாக கூறும் "ஏனோ வானிலை மாறுதே"

காதலை கவித்துவமாக கூறும் \

வெளியான நாள் முதல் யூ டியுபில் தொடர்ந்து முதல் #10 Trending-க்குள் வலம் வந்த Youthful Magic "ஏனோ வானிலை மாறுதே" குறுத்திரை படத்தை வெள்ளித்திரை தரத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும்படி ரசனையாக இயக்கியுள்ளார் இயக்குனர் புனித்.

ஒவ்வொரு Shot-ம் Sweet-அ Cute-அ கண்ணுக்கு குளிர்ச்சியா ஒளிப்பதிவு செய்துள்ளார் வினோத்ராஜேந்திரன். புனித்தின் கதை களத்திற்கும் வினோத்தின் ஒளிப்பதிவிற்கும் இணைந்து காவியமாய் அமைந்துள்ளது சித்துகுமாரின் இசை. தமிழ்குமரனின் எடிட்டிங் ஏனோ வானிலை மாறியதை எதார்த்தமாய் காட்டியிருக்கிறது. இந்த ஒட்டு மொத்த குழுவின் உன்னத உழைப்பு மக்களின் ஆதரவிலும் படத்தின் தரத்திலும் தெரிகிறது.

இன்று இணையத்தை ஆட்கொண்டிருக்கும் "ஏனோ வானிலை மாறுதே" இளைஞர்கள் மனதில் "அழகாய் காதல் தூருதே". ஏனோ வானிலை மாறுதே குறும்படம் காதலர்களை காதலுக்கும் கடத்தி செல்லும் கவிதை. வெளியிட்டதிலிருந்து 9 நாட்களில் 18 லட்சத்திற்கும் மேல் பார்வைகளை பெற்றுள்ள ஏனோ வானிலை மாறுதே,  இன்னும் ஒரு நாளில் அது 20 இலட்சம் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காதலும் காமெடியும் கலந்த கதம்பம், இந்த மாதிரி ஒரு காதல் நம்ம வாழ்க்கையிலும் வரனும்னு ஆசைப்படுற அளவுக்கு அழகாய் இருக்கிறது படம். பேபி மனுஸ்ரீ கொஞ்சி கொஞ்சி நடிச்சிருக்காங்க, நக்ஷத்ராவும் அருணும் காதலை கண்ணியமா பிடிச்சிருக்காங்க. எப்ப வரும் எப்படி வரும்னு தெரியாத காதலை இந்த படம் YouTube -ல் வந்து அழகாய் சொல்லிருக்கு. காதலை கண் குளிரும் தரத்தில், காதலை காதலின் நிறத்தில், சொல்லிய அழகிய குறும்படம் "ஏனோ வானிலை மாறுதே".

நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் விவரங்கள்:

நடிப்பு  : அருண், நக்ஷத்ரா நாகேஷ், கல்லூரி மதன்

எழுத்து & இயக்கம் : புனித்

இசை : சித்துகுமார்

ஒளிப்பதிவு : வினோத் ராஜேந்திரன்

படத்தொகுப்பு : தமிழ் குமரன்

பாடல்கள் : அஜித் சாய், விக்னேஷ் ராமகிருஷ்ணன்

Tags: News, Hero, Star

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top