அஜித்தின் 61வது பட ஃபஸ்ட் லுக் ரிலீஸ் எப்போது?
Posted on 12/08/2022

நடிகர் அஜித் படம் நடிப்பது அது முடிந்தால் உடனே புதிய விஷயத்தில் கவனம் செலுத்துவது என எப்போதும் தன்னை பிஸியாகவே வைத்துக் கொண்டு இருக்கிறார். அண்மையில் பைக்கில் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்ற அஜித் அங்கு நிறைய புகைப்படங்கள் எடுத்துள்ளார்.
அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் என்ன மாஸ் செய்தது என்பது நமக்கே தெரியும்.
சுற்றுலா சென்று திரும்பியுள்ள அஜித் தனது 61வது பட படப்பிடிப்பை தொடங்கவுள்ளார்.
3வது முறையாக வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜித் படம் நடிக்கிறார். இப்படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்தது. இப்போது அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இம்மாத இறுதியில் சென்னையில் நடக்க தொடங்க இருக்கிறதாம்.
அதோடு பட ஃபஸ்ட் அடுத்த வாரத்தில் ரிலீஸ் ஆகலாம் என்கின்றனர்.
Tags: News