வாரிசு படத்தின் சண்டை காட்சி!
Posted on 04/08/2022

தளபதி விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் வாரிசு. வம்சி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தை தில் ராஜு தயாரிக்கிறார்.
நடிகை ராஷ்மிகா முதல் முறையாக இப்படத்தின் மூலம் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். சரத்குமார், பிரபு, குஷ்பூ, ஸ்ரீகாந்த், ஷாம், பிரகாஷ் ராஜ், யோகி பாபு அகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
பிரமாண்டமாக தயாராகி வரும் இப்படம் வருகிற 2023ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டனர்.
கடந்த ஜூன் 22ஆம் தேதி வெளிவந்த இப்படத்தின் First லுக் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதை தொடர்ந்து வாரிசு படத்தின் முதல் பாடல் எப்போது வெளியாகும் என்று தான் விஜய் ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
இந்நிலையில், வாரிசு படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து விஜய்யின் புகைப்படம் ஒன்று லீக்காகியுள்ளது. இது படத்தில் இடம்பெறும் சண்டை காட்சி என்றும் கூறப்படுகிறது.
Tags: News, Hero