அமெரிக்கா ஹாஸ்பிடலில் விஷால்!
Posted on 26/02/2018

பொதுவாக பாலா படம் என்றாலே படம் முடிவதற்குள் அந்த படத்தில் நடித்த ஹீரோ, வில்லனுக்கு பல சமயங்களில் உடலில் பல இடங்களில் அடிபடும். எலும்பு உடையும், தோல் கிழியும். இதனால்தான் என்னவோ பாலா படங்களில் நடிக்க சில மாஸ் ஹீரோக்களே கொஞ்சம் யோசிப்பார்கள்.
இந்நிலையில்தான் 'அவன் இவன்' படத்தில் விஷால் நடித்தார். அதில் அவருக்கு மாறுகண் வேடம் என்பதால் மிகவும் சிரமப்பட்டு நடித்தார். ஆனால் படம் முடிந்து பல வருடங்களாகியும் கண் வலியாலும், தலை வலியாலும் அவதிப்பட்டு வந்தார்.
போதாக்குறைக்கு 'துப்பறிவாளன்' படத்தில் சண்டைக் காட்சியில் டூப் இல்லாமல் நடித்தபோது தோள்பட்டையிலும் செம அடி விழுந்தது. இந்த வலிகளால் துடித்த விஷால் சில நாட்களுக்கு முன் டெல்லி ஹாஸ்பிடலில் சிகிச்சை எடுத்தார். ஆனாலும் தற்போது சிகிச்சை எடுக்க அமெரிக்காவிலுள்ள ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார் விஷால். இரண்டு வாரங்களில் விஷால் இந்தியா வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tags: News, Hero, Star