மீண்டும் இணையும் சூப்பர் ஹிட் கூட்டணி!
Posted on 30/01/2018

நடிகர் விஜய் தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் படத்தில் நடித்து வருகிறார். இதை முருகதாஸ் இயக்கிவருகிறார். இதை முடித்தபிறகு விஜய் சூப்பர்குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100வது படத்தில் நடிக்கவுள்ளார்.
விஜய்யின் 'பூவே உனக்காக', 'லவ் டுடே', 'துள்ளாத மனமும் துள்ளும்', 'திருப்பாச்சி', 'ஜில்லா' ஆகிய படங்களை இந்த நிறுவனம் இதற்குமுன் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. விஜய்க்கு பொருத்தமான கதையை தேர்ந்தெடுப்பதில் இந்த நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறதாம். இதுதான் தற்போது கோலிவுட் முழுக்க பரபரவென்று உலா வரும் செய்தி.
Tags: News, Hero, Star