விஜய் 60 படத்தில் கல்லூரி மாணவர்களாக நடிக்கும் விஜய், கீர்த்தி
Posted on 01/09/2016

விஜய் 60 படத்தில் இளைய தளபதி விஜய் மருத்துவக் கல்லூரி மாணவராக நடிக்கிறாராம்.
அழகிய தமிழ் மகன் படத்தை இயக்கிய பரதன் தற்போது விஜய்யுடன் மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ளார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை தற்போதைக்கு விஜய் 60 என்கிறார்கள். படப்பிடிப்பு அடுத்த மாதம் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஜயா புரொடக்ஷன் தயாரித்து வரும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், சதீஷ், ஜெகபதி பாபு, டேனியல் பாலாஜி மற்றும் பலர் நடித்து வருகின்றனர். சந்தோஷ் நாராயணன் படத்திற்கு இசையமைக்கிறார்.
இப்படத்தில் விஜய் மருத்துவக் கல்லூரி மாணவராக நடித்து வருவதாக தகவல் கசிந்துள்ளது. கீர்த்தி சுரேஷும் கல்லூரி மாணவியாக நடிக்கிறார். 2012-ம் ஆண்டு வெளியான நண்பன் படத்தில் விஜய் பி.இ. மாணவராக நடித்தார். நான்கு ஆண்டுகள் கழித்து மீண்டும் மாணவராகியுள்ளார்.
பல படங்களில் வில்லன் ரோலில் மட்டும் நடித்த டேனியல் பாலாஜி இப்படத்தில் பாசிட்டிவ் ரோலில், அதுவும் எமோஷனல் ரோலில் நடித்துள்ளாராம்.
Tags: News, Hero, Star