தென்னாப்பிரிக்காவில் மடோனாவுடன் டூயட் பாடும் விஜய் சேதுபதி
Posted on 19/09/2016

கோலிவுட் திரையுலகில் பிசியான ஹீரோக்களில் ஒருவரான விஜய்சேதுபதியின் 'தர்மதுரை' சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில் அவர் நடித்து முடித்துள்ள 'ஆண்டவன் கட்டளை' மற்றும் 'றெக்க' ஆகிய படங்கள் விரைவில் வெளியாகவுள்ளன.
இந்நிலையில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய்சேதுபதி, மடோனா செபாஸ்டியன் நடித்து வரும் படத்தின் முதல் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் முடிந்துவிட்டது. அடுத்தகட்ட படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தின் இரண்டு பாடல்கள் அடுத்தகட்ட படப்பிடிப்பில் படமாக்கப்படவுள்ளதாகவும், அவற்றில் ஒரு பாடல் தென்னாப்பிரிக்காவில் படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன. இந்த பாடல் ஒரு டூயட் பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய்சேதுபதி, மடோனா செபாஸ்டியன், டி.ராஜேந்தர் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்து வருகிறார். ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்திற்கு பிரபல எழுத்தாளர்கள் சுபாவின் திரைக்கதை - வசனம் எழுதி வருகின்றனர்.
Tags: News, Hero, Star