விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்!
Posted on 16/01/2018

விஜய் சேதுபதியின் ரசிகர்களுக்கு மேலும் ஒரு நல்ல செய்தி கிடைத்துள்ளது. ஆறுமுக குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக், நிஹாரிகா, காயத்ரி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன். படத்தின் டீஸரே தெறிக்க விட்டிருந்தனர். ராமன் கெட்டவனா, ராவணன் கெட்டவனா என்று டீஸரில் கேட்டிருந்தார் விஜய் சேதுபதி.
ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படம் இந்த மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் படம் பிப்ரவரி மாதம் 2ம் தேதி ரிலீஸாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படத்தை பார்த்த சென்சார் போர்டு யு சான்றிதழ் வழங்கியுள்ளது. படத்தில் விஜய் சேதுபதி 8 வித்தியாசமான கெட்டப்புகளில் வருகிறார். விஜய் சேதுபதி ஒரு கெட்டப்பில் வந்தாலே அவரது ரசிகர்கள் மகிழ்வார்கள். அப்படி இருக்கும்போது 8 கெட்டப் என்பதால் படத்தை பார்க்கும் ஆவல் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
விஜய் சேதுபதியின் பிறந்தநாளான இன்று சீதக்காதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது, ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் ரிலீஸ் தேதி தெரிய வந்துள்ளது ஆகியவற்றால் ரசிகர்கள் குஷியாகியுள்ளனர். விஜய் சேதுபதிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Tags: News, Hero, Star